இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள்

0 comments

இமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். இந்த போட்டோ அல்லது இமேஜ் எடிட்டர் அல்லது பைல் வியூவர்களை கொண்டே காண முடியும். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும். நாம் இதுவரை வேர்ட் பைல்களை மட்டுமே பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்து வந்தோம், அவ்வாறு இல்லாமல் நமக்கு பிடித்த இமேஜ்களையோ அல்லது முக்கியமான படங்களையே பிடிஎப் பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும். 


நம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம், ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.

இமேஜ் to பிடிஎப் சுட்டி


இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும், மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது ஆகும்.

20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.

0 comments

மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி
இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனைத்தையும் ஒரே
இடத்தில் இருந்து எளிதாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி
மாறிக்கொண்டே தான் இருக்கிறது,  என்னதான் இசையின் வளர்ச்சி
வேகமாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும்
கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை
கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை
எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html
இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி
தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை
சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன
ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.  எந்த பார்ஃமெட் -ல்
தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான
இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்
இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்

0 comments

நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்க்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம், அதுபோல கணினியில் உள்ள படக்காட்ச்சிகளை அல்லது சில முக்கியமாக கோப்புகளை படம் பிடிக்க வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மானிட்டர் முழுவதையுமே அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ படம் பிடிக்க வேண்டியிருக்கும். இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம், அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும்.


நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும், இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும், நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

 
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து Capture பொத்தானை அழுத்தவும். உடனே இமேஜ் பைல் உருவாகிவிடும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தேவையில்லாத Capture செய்துவிட்டோம் எனில் உடனே டெலிட்டும்  செய்து கொள்ள முடியும்.

அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி

0 comments

ஆங்கிலத்தில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு விளக்கம் தேடஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில் இருந்து அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும்  நேரடியாகவிளக்கம் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கில வார்த்தைகளில் பல புதுமையான வார்த்தைகள் பார்க்கும்
போது அந்த வார்த்தைக்கான விளக்கத்தை தேடி பல தளங்கள்
செல்வதுண்டு பல தளங்களில் நாம் தேடிய வார்த்தை கிடைப்பதும்
இல்லை இந்த நேரத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.dictionary.hm
இந்தத் தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் எந்த வார்த்தைக்கு விளக்கம் வேண்டுமோ
அந்த வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும் உடனடியாக
நமக்கு அதே திரையில் நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தைக்கான
விளக்கம் சில நொடிகளில் வரும்.  Ajax தொழில்நுட்பத்தில்
இருக்கும் வார்த்தை Catcher என்ற புதிய முறையின் மூலம்
இவர்கள் நேரடியாக தேடிக்கொடுக்கின்றனர். இந்தத்தளத்தில்
நாம் தேடும் வார்த்தைக்கான விளக்கமும் நமக்கு திருப்தி
அளிக்கும் வகையில் உள்ளது கூடுதல் சிறப்பு. கண்டிப்பாக
இந்ததளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி

0 comments

கூகிள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியில்நம்மை தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம்பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension.    Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம்.  இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது  Download என்பதை  குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்.
தரவிரக்க முகவரி :  Download

கணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு.

0 comments

கணினியில் ஏற்படும் அனைத்துவிதமான ஸ்பைவேர் மற்றும்மால்வேர் பிரச்சினைகளுக்கும் Registry-ல் ஏற்படும்பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளதுஇதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினி பயன்படுத்தும் நமக்கு சில நேரங்களில் வேகம் குறைவாக
இருக்கலாம். தேவையில்லாத அப்ளிகேசன் அடிக்கடி திறக்கலாம்.
உலாவி திறக்கும் போது கூடவே சில இணையதளங்கள் திறக்கலாம்
இது மட்டும் இல்லாமல் பல நேரங்களில் பிழை செய்தி கூட
வந்து நம்மை வெறுப்படைய செய்யும் இப்படி கணினியில்
அடிக்கடி எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.filehippo.com/download_ccleaner/
இந்த தளத்திற்கு சென்று CCleaner மென்பொருளின் புதிய பதிப்பை
இலவசமாக தரவிரக்கி கொள்லலாம். மென்பொருளை இயக்கி
நம் கணினியில் தேவையில்லாமல் இயங்கும் ஸ்பைவேர்
மற்றும் மால்வேர் போன்றவற்றை எளிதாக நீக்கலாம். வைரஸ்
நீக்கும் மென்பொருள் பயன்படுத்துவதால் நம் கணினியின் வேகம்
குறைவாக இருக்கும் என்று நினைப்பவர்களும் இந்த இலவச
மென்பொருளை பயன்படுத்தலாம். கண்டிப்பாக கணினி பயன்படுத்தும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கினை பயன்படுத்தி பிடிஎப் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய

0 comments

நாம் இதுவரை பிடிஎப் லைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய பல மென்பொருட்களை பயன்படுத்திவந்தோம், குறிப்பாக PDF Tiger, PDFZilla  போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தியே பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றி வந்தோம், இல்லையெனில் ஆன்லைனில் கன்வெர்ட் செய்வோம். ஒதுவும் ஒரு வகையில் ஆன்லைன் கன்வெர்சனே ஆகும். ஆனால் இந்த ஆன்லைன் கன்வெர்சனானது பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்றம் செய்ய நாம் பேஸ்புக்கினை நாடி செல்ல வேண்டும். பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைக்கொண்டு பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ல முடியும்.


பிடிஎப் பைலை வேர்ட் பைலாக மாற்றம் செய்யும் போது படம் மற்றும் எழுத்துக்களில் ஒரு சில தவறுகளும் தெளிவில்லாமலும் இருக்கும், ஆனால் இந்த பேஸ்புக்கினை பயன்படுத்தி கன்வெர்ட் செய்யும் வேர்ட் பைல்கள் அனைத்துமே மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது, ஆனால் ஒரே ஒரு மைனஸ்பாயின்ட் என்வென்றால் தமிழ் பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக கன்வெர்ட் செய்யும் போது சரியானதாக இல்லை.

பேஸ்புக்  PDF to WORD கன்வெர்ட் சுட்டி


இந்த பேஸ்புக் கன்வெர்ட்டரை பயன்படுத்த வேண்டுமெனில் நம்முடைய பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு எந்த பிடிஎப் பைலை கன்வெர்ட் செய்யவேண்டுமோ அதை Browse பொத்தானை அழுத்தி செலக்ட் செய்யவும், பின் இணையத்தில் பதிவேற்றம் நடைபெற்று பதிவிறக்க சுட்டி கிடைக்கும், இந்த சுட்டியினை நாம் 24 மணி நேரத்துக்குள் எப்பொழுது வேண்டுமானலும் பயன்படுத்தி டவுண்லோட் செய்துகொள்ள முடியும்.
Related Posts with Thumbnails