0 comments

கூகுள் ஜீடாக்- சாட்டில் Autoreply செய்துவைக்க புதுமையான வழி

April 30, 2010

கூகுள் ஜீடாக்-ல் நண்பருடன் சாட் செய்து கொண்டிருப்போம் சில
நேரங்களில் நாம் வெளியே சென்றதும் நண்பர் ஏதாவது தகவல்
கொடுத்தால் Auto Reply செய்துவைத்தால் அவருக்கு உடனடியாக
தகவல் கொடுக்கப்பட்டுவிடும் எப்படி செய்யலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

ஜீடாக்-ல் ஸ்டேட்டஸ் மெசேஸ் கொடுத்து வைக்கலாம் சில
நேரங்களில் நாம் பிஸியாக இருப்பதாக வைத்திருப்போம் அல்லது
பாட்டு கேட்டுகொண்டிருக்கிறோம் என்று பல Status மேசேஸ்
கொடுத்து வைத்திருப்போம் இனி அதையும் தாண்டி நாம் ஜீடாக்
ஆன் செய்துவிட்டு வெளியே சென்றாலும் நமக்கு ஜீடாக்-ல் யாராவது
தொடர்பு கொண்டால் உடனடியாக அவருக்கு என்ன பதில் கொடுக்க
வேண்டும் என்பதை முதலிலே Autoreply கொடுத்து வைக்கலாம்
இதற்க்காக ஒரு சிறப்பு மென்பொருள் உள்ளது இதை இந்த முகவரியில்
இருந்து தரவிரக்கிக்கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://gtalkautoreply.codeplex.com

0 comments

இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி

April 29, 2010

இண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில்
சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட்
வேகத்தை அதிகரிக்கலாம்.

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது வேகம் இல்லை என்று கூறும்
அனைவருக்காகவும் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கும் எளிய
முறையைப் பற்றி இனி பார்க்கலாம். முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்
எளிய முறைகளைகளை இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்
பார்த்து விட்டு பின்பு செய்யவும். முதலில் படம் 1-ல் காட்டியபடி Start
பொத்தானை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்து
படம் 2-ல் காட்டியபடி அதில் gpedit.msc என்று கொடுத்து ok பொத்தானை
அழுத்தவும். அடுத்து திரையில் படம் 3-ல் காட்டியபடி தோன்றும் இதில்
Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து
Network என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து QoS Packet Scheduler
என்பதை தேர்ந்தெடுத்ததும் வலது பக்கத்தில் தெரிவதில்
Limit Reservable bandwidth என்பதை தேர்ந்தெடுத்து Double click
செய்யவும் படம் 4-ல் இருப்பது போல் தோன்றும் அதில் நாம் Enable
என்பதை தேர்வு செய்யவும் கூடவே அதில் இருக்கும் Bandwidth என்பதில்
22 என்பதை கொடுத்து apply மற்றும் ok பொத்தானை அழுத்தவும்
அடுத்து கணினியை ஒருமுறை Restart செய்யவும். இப்போது உங்கள்
கணினியில் இண்டெர்நெட் இணைப்பின் வேகம் இரண்டு மடங்காக
அதிகரிக்கப்பட்டிருக்கும்.


0 comments

லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி

April 29, 2010

லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி
கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது
இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன்
மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார்
சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை
ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக
கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும்
வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக
ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர்
என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த
மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.

முகவரி : http://www.caffinc.com/files/monpwr/monpwr.exe

இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக
Double Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும்
அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை
மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு
“Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும்
பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்

0 comments

கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை? உஷார்... உடல் நலம் பாதிக்கப்படலாம்

>> TUESDAY, APRIL 27, 2010



புதுடில்லி : உங்கள் வீட்டுக் குழந்தை அதிக நேரம் கம்ப்யூட்டரில் செலவழிக்கிறதா? உடனடியாகக் கண்காணியுங்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிப் போனால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.


பயமுறுத்தவில்லை. உண்மை அதுதான். இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அருகிலிருப்பவர் கூட இணையம் மூலம்தான் தொடர்பு கொள்கிறார். இச்சூழலில் நம் வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்குமானால், நம் குழந்தைகளின் நடவடிக்கைகளை ஆராய்வது அவசியம். டில்லி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். தங்கள் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இன்றைய நிலையில் பெரும்பாலோரை அடிமையாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் கேம்ஸ் வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் வருகின்றது. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூட நன்றாகப் பேசி சிரித்து இருப்பதில்லை. எப்போதும் கனவுலகில் மிதக்கின்றனர். இது அவர்களுக்கு எளிதாகவும் வாய்க்கிறது.


'secondlife.com, gojiyo.com, farmville போன்ற வலைத்தளங்கள் 'அனிமேஷன்' மூலம் கற்பனை உலகிற்குள் குழந்தைகளை இழுக்கின்றன. இதனால், குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் இந்த உண்மையான உலகிலிருந்து துண்டிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது கல்வி இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படுகிறது. வலைத்தளங்களின் விளையாட்டுகளில் ஜெயிப்பதுதான் அவர்களது குறிக்கோளாகிறது' என்கிறார் ஒரு டாக்டர். உடல்நலம் பாதிப்பதால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படுகிறது. இது பல நோய்களுக்கு வித்திடுகிறது. குறிப்பாக, தொடர்ச்சியான தலைவலி, கண் எரிச்சல், இமைகளில் எரிச்சல் உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதனால் தொடர்ந்து, கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை இருந்துவிடாமல் அவ்வப்போது அவர்களுடன் விளையாடுங்கள். அப்படி 'நெட்' அடிமையாகும் அறிகுறி தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நலம் என்கின்றனர் உளவியல் துறை நிபுணர்கள்


source:dinamalar


--
0 comments
புண்டுவில் pdf கோப்புகளை text கோப்புகளாக மாற்ற முடியும். இதற்கு

system->administration->synaptic package manager சென்று அதன் search பெட்டியில் pdftotext என்று உள்ளீடு செய்தால் நமக்கு poppler-utils என்ற நிரல் வரும். அதை தேர்வு செய்து நிறுவிக்கொள்ளவேண்டும்.


இதனை செயல்படுத்த டெர்மினலில்

pdftotext xxx.pdf xxx.txt என்று தட்டச்சு செய்யவேண்டும். நமக்கு தேவையான கோப்பின் பெயர் கொடுக்கவேண்டும்.


மேலே உள்ள படத்தில் ஒரு pdf கோப்பு text கோப்பாக மாற்றியப்பின் எப்படி இருக்கும் என காட்டுகிறது. இப்போது கோப்பினை திறந்து பார்க்கலாம்.

ஒரு pdf கோப்பு

text கோப்பாக மாற்றியப்பின்



இதில் மேலும் சில கட்டளைகள்

pdftotext -l 4 xxx.pdf xxx.txt என்று கட்டளையிட்டால் கடைசி நான்கு பக்கங்கள் மட்டும் text கோப்பாக மாற்றும்.

pdftotext -f 3 xxx.pdf xxx.txt என்று கட்டளையிட்டால் முதல் மூன்று பக்கங்கள் மட்டும் text கோப்பாக மாற்றும்.

இந்த பக்கங்களின் எண்ணிக்கையை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளலாம்.


pdftotext -upw 'password' xxx.pdf xxx.txt என்று கட்டளை கொடுத்தால் கடவுச்சொல் உடைய pdf கோப்பினை மாற்றலாம்.

0 comments

அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட்

April 27, 2010

அமெரிக்கவில் அதிகமான பேர் பார்க்கும் முதல் இணையதளமாக
இருந்த கூகுளை பேஸ்புக் இணையதளம் பின்னுக்கு தள்ளி முதல்
இடம் பிடித்துள்ளது இதைப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.

எதற்க்கு என்றாலும் கூகுள் தான் என்று ஆகிவிட்ட இந்த நிலையில்
கூகுளின் முதலிடத்தை சற்று அசைத்து பார்த்திருக்கிறது பேஸ்புக்.
அதிகமான பேர் திரும்ப திரும்ப பயன்படுத்தும் இணையதளமாக
பேஸ்புக் முதல் இடத்தில் வந்துள்ளது. தொடமுடியாத இடத்தில்
இருந்த கூகுள் முதன் முறையாக இப்போது தான் இரண்டாவது
இடத்திற்க்கு வந்துள்ளது. சமீபத்தில் தான் நம் சங்கத்தலைவர்
பில்கேட்ஸ் பேஸ்புக் -உடன் டாக்ஸ்-ல் இணைந்தார் என்ற
செய்தியை வெளியீட்டு இருந்தோம் ஏன் பேஸ்புக்-ல் மைக்ரோசாப்ட்
டாக்ஸ்-ஐ இணைந்தார் என்று புரியாத புதிராக இருந்த நமக்கு
இப்போது தான் உண்மை தெரிந்திருக்கிறது. (சோலையன் குடுமி
சும்மா ஆடுமா ) ஆனாலும் இது நிரந்தரமில்லை என்று தான்
தோன்றுகிறது. கூகுள் கொடுக்கும் சேவையில் ஒன்றை கூட்டினால்
கூட அவர்கள் முதலிடத்தை மட்டுமல்ல யாரும் நெருங்ககூட முடியாத
இடத்தை பிடிப்பார்கள் என்பது நம் நோக்கம்


0 comments

இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்

April 26, 2010

விடுமுறை தொடங்கிவிட்டது நம் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும்
விடுமுறை மற்றும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை எப்படி
அனுப்பலாம் என்று பார்க்கப்போகிறோம் இதைப்பற்றித்தான்
இந்த பதிவு.

படம் 1

பிறந்த நாள் வாழ்த்து முதல் திருமண நாள் வாழ்த்து வரை அனைத்து
திருவிழாவுக்கும் வாழ்த்து அட்டைகளை எளிதாக உடனடியாக
உருவாக்கி நம் நண்பருக்கும் உறவினருக்கும் எளிதாக அனுப்பலாம்
இதற்க்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.

படம் 2

படம் 3

இணையதள முகவரி : http://www.cardsimple.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
send this card என்ற பட்டனை அழுத்தவும் அடுத்து படம் -2 ல்
காட்டியபடி நாம் அனுப்பும் வாழ்த்துச்செய்தியை தட்டச்சு செய்யவும்.
தட்டச்சு செய்து முடித்ததும் அனுப்புபவரின் பெயர் மற்றும் இமெயில்
முகவரி அடுத்து பெறுநர் பெயர் மற்றும் இமெயில் முகவரியை
கொடுத்து என்றைக்கு வாழ்த்துச்செய்தி கிடைக்க வேண்டும் என்ற
தேதியைம் கொடுத்து preview என்ற பட்டனை அழுத்தவும் எந்த
கணக்கும் தேவையில்லை. இப்போது படம் 3-ல் காட்டியபடி
send card என்ற பட்டனை அழுத்தி படத்தை எளிதாக அனுப்பலாம்.
பல்வேறுபட்ட வாழ்த்துச்செய்திக்கான அட்டை மற்றும் செய்தியும்
உள்ளே இருக்கிறது இதில் நமக்கு ஏது வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து இதே போல் எளிதாக அனுப்பலாம்.


0 comments

பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்

April 23, 2010

பேஸ்புக் நிறுவனமும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் டாக்ஸ்
என்ற சேவையை மக்களுக்கு கொடுப்பதற்க்காக இணைந்துள்ளனர்
இதைப்பற்றிய ஒரு சிறப்பு பதிவு.

உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்டு முதலிடத்தில்
இருந்து வரும் பேஸ்புக் டிவிட்டர் வந்த பின் கொஞ்சம் பயனாளர்கள்
பேஸ்புக் பயன்படுத்துவது குறைந்து வருகிறது இதேப் போல் தான்
மைக்ரோசாப்ட்-ன் நிலமையும் கூகுள் டாக்ஸ் வந்த பின் அதிக
பயானர்கள் கூகுள் பக்கம் திரும்பியுள்ளனர் இதற்க்கு தீர்வாக
இரண்டும் கைகோர்த்து மைக்ரோசாப்ட்-ன் டாக்ஸ் -ஐ இனி
பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் நண்பர்களிடம் எளிதாக
பகிர்ந்துகொள்ளலாம். தன் சேவையை அனைத்து மக்களிடமும்
எடுத்துச்செல்லவும் கூகுள் டாக்ஸ் -க்கு போட்டியாக அதிக
பயனார்களை எளிதாக பிடிக்கும் நோக்கத்துடன் தான் மைக்ரோசாப்ட்
இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பேஸ்புக் வாடிக்கையாளர்கள்
http://docs.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் எல்லா
கோப்புகளையும் பேஸ்புக்-ல் உள்ள அனைவரிடமும் எளிதாக
பகிர்ந்து கொள்ளலாம். இப்படியே சென்றால் கூகுள் டாக்ஸ்-ம்
டிவிட்டரும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை

0 comments

FRIDAY, APRIL 23, 2010

அதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்



வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.ஆனால் இவற்றைத் தேடி அழிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என்று கேள்விப்பட்டவுடன் நம் மனதிற்கு வருவது சைமாண்டெக், மெக் அபி, நார்டன் ஆகியவையே. ஆனால் இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அவ்வளவாகப் புகழ் பெறாமல் உள்ளன. இவை செயல்பாட்டில் பிரபலமான புரோகிராம்களுக்கு இணையாகவே உள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. பிட் டிபன்டர் (BitDefender) பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
3. கிளாம் ஏவி (Clam AV): இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
4.அவாஸ்ட் (Avast): மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt): இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security): NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
8. ஐ ஆண்ட்டி வைரஸ் (iAnti Virus): இதன் பெயரில் உள்ள ஐ என்பதைப் பார்த்தவுடன் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மேக் கம்ப்யூட்டர்களுக்கானது என்று அறிந்திருப்பீர்கள். மேக் கம்ப்யூட்டர்களில் எல்லாம் வைரஸ் வராது என்று சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் என அனைத்து வகை சிஸ்டங்களிலும் வைரஸ்கள் புகுந்து நாசம் விளைவிக்கின்றன. இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் செயல்படுவதும், மேக் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் போல ஒன்றின் வழியாகத்தான். மேக் சிஸ்டத்திற்கு மிகச் சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இது.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
9. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை மேலே பார்த்தோம். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள இதனையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு, மைக்ரோசாப்ட் தரும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இலவசமாகும். பொதுவாக மைக்ரோசாப்ட் மற்றும் இலவசம் என்ற இரண்டும் இணையாது. இது ஒரு விதிவிலக்காகும்.
மேலதிக தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
10. ஸோன் அலார்ம் (Zone Alarm): மற்ற ஆண்ட்டி வைரஸ் தராத ஒரு சிறப்பான உதவியை ஸோன் அலார்ம் செய்கிறது. டேட்டா லாக் என்னும் டூலை ஸோன் அலார்ம் தருகிறது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் டேட்டாவிற்கு என்கிரிப்ஷன் மூலம் பாதுகாப்பு தரும் வேலையையும் இது மேற்கொள்கிறது. எனவே என்கிரிப்ஷன் கீ இல்லாதவர்கள் டேட்டாவினப் படித்து அறிய இயலாது. அதே போல கம்ப்யூட்டரை பூட் செய்வதிலும் இது பாதுகாப்பு தருகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ், என்கிரிப்ஷன், பூட் அனுமதி என கூடுதல் வசதிகளையும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிரம் தருகிறது.
0 comments

ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.

April 24, 2010

ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட்-ன் ஆபிஸ்
வேர்ட்-ல் எளிதாக எப்படி பார்க்கலாம் என்பதை பற்றிதான்
இந்த பதிவு.

படம் 1

படம் 2

மைக்ரோசாப்ட்-ன் பயன்பாடு பற்றி சொல்வதென்றால் நமக்கு
நேரம் காணது. சில பொருள்களுக்கான வார்த்தையை நாம்
இணையத்தில் சென்று தேடுவதற்க்கு பதில் மைக்ரோசாப்ட்
வேர்டு-ல் எளிதாக பார்க்கலாம். இதற்க்கு நாம் மைக்ரோசாப்ட்
வேர்டு- ஐ திறந்து நாம் தட்டச்சு செய்வதை தொடங்கலாம் எந்த
வார்த்தைக்கான பொருளுள்ள வார்த்தை தேவையோ அந்த
வார்த்தையின் மேல் வைத்து Right Clik செய்யவும் அதில் Synonyms
என்பதில் சென்றால் அதில் நாம் தேர்ந்தெடுத்த வார்த்தைக்கான
பல வகையான வார்த்தைகளை பார்க்கலாம் எது தேவையோ
அதை எடுத்துக் கொள்ளலாம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் people என்ற வார்த்தையின் மேல்வைத்து
Right Click செய்து Synonyms என்பதை தேர்ந்தெடுத்துள்ளோம்
இதற்க்கான ஒரே பொருளுள்ள வார்த்தை படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது. இண்டெர்நெட் இணைப்பு இல்லாத நேரத்திலும்
நாம் வேர்ட்-ல் பொருளுக்கு இணையான வார்த்தையைப்
பார்க்கலாம் கண்டிப்பாக இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.


0 comments

தொலைகாட்சியில் இலகுவாக youtube வீடியோ பார்ப்பது எப்படி ?

அப்பாவி தமிழன்

உங்க தொலைக்காட்சியில் எளிதாக , இலவசமாக youtube பார்க்க வேண்டுமா ??இன்டர்நெட் (internet), கேபிள்(cable) , மோடம் எதுவும் தேவை இல்லை .ஆச்சரியமாக இருக்கிறதா ???watch youtube without internet.watch youtube on television without cables.How to watch youtube in tv?

கீழே போங்க



இன்னும் கீழே போங்க



0 comments

கியரை போடுங்க...ஜிமெயிலை ஆஃப்லைனில் ஓட்டுங்க...

நாம் மின்னஞ்சல் சேவைக்கு பெரும்பாலும் உபயோகிப்பது ஜிமெயில் வசதியைத்தான் என்பதை மறுக்க இயலாது. ஆனால் ஒரு சில சமயங்களில் இணைய இணைப்பு தடைபட்ட தருணங்களில், நமக்கு ஏற்கனவே வந்திருந்த மின்னஞ்சலை திறந்து ஒரு முக்கியமான விபரத்தை காணவேண்டுமெனில் என்ன செய்ய முடியும்?
மைக்ரோசாப்ட் Outlook, Thunder Bird போன்ற வசதிகள் நமக்கு மின்னஞ்சல் வசதியை Offline -இல் பணிபுரிய பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஜிமெயிலில் இந்த வசதியை கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். (எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த வசதியை உருவாக்கப் போகும் கணினி/லேப்டாப் உங்களால் மட்டுமே கையாளப்படுகிறதா.. என்பதை தெளிவாக உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்)
முதலில் இந்த வசதியை நிறுவ நமது கணினியில் கூகிள் கியர்ஸ் பதியப்பட்டிருக்க வேண்டும். கீழே தரப்பட்டுள்ள சுட்டியிலிருந்து கூகிள் கியர்சை தரவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.



உங்கள் உலாவி ரீ ஸ்டார்ட் ஆகி வந்தவுடன், உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்திடுங்கள்.
இனி வரும் திரையில் Offline டேபை திறக்கவும்.


பிறகு Offline Mail க்கு நேராக உள்ள Enable Offline Mail for this Computer ஐ தேர்வு செய்து கொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை சொடுக்குங்கள்.



அடுத்து வரும் வசனப் பெட்டி கீழே தரப்பட்டுள்ளது போல இருக்கும்.


இதில் I trust this site. Allow it to use Gears என்பதை தேர்வு செய்து Allow பொத்தானை சொடுக்கவும்.

அடுத்த வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் Shortcut வசதியை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்கவும்.


இப்பொழுது உங்கள் ஜிமெயில் திரையில் மேல் வலது புறத்தில் Installation நடந்து கொண்டிருப்பதை காணலாம். உங்கள் மெயில் பாக்ஸின் அளவைப் பொருத்து நேரம் மாறுபடும்.

இனி இணைய வசதி இல்லாத பொழுதும், உருவாக்கப்பட்டுள்ள shortcut ஐ க்ளிக் செய்வதன் மூலம், உங்கள் மெயில் பாக்சை திறக்க முடியும், மெயில் பாக்ஸில் தேடமுடியும், மேலும் புதிதாக மின்னஞ்சலை கம்போஸ் செய்து send கொடுத்தால் அது otubox இல் சென்று, பிறகு நீங்கள் எப்பொழுது இணையத்தில் தொடர்பு ஏற்படுத்துகிறீர்களோ, அப்பொழுது அவை தானாக அனுப்பப் பட்டுவிடும்.

மேலும் விவரங்களுக்கு கூகுளின்https://mail.google.com/mail/exp/197/html/en/help.html தளத்திற்கு சென்று பாருங்கள்.

Related Posts with Thumbnails