பேஸ்புக்கும் மைக்ரோசாப்ட்-ம் டாக்ஸ் -இல் இணையும் புதிய தகவல்

April 23, 2010

பேஸ்புக் நிறுவனமும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் டாக்ஸ்
என்ற சேவையை மக்களுக்கு கொடுப்பதற்க்காக இணைந்துள்ளனர்
இதைப்பற்றிய ஒரு சிறப்பு பதிவு.

உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்டு முதலிடத்தில்
இருந்து வரும் பேஸ்புக் டிவிட்டர் வந்த பின் கொஞ்சம் பயனாளர்கள்
பேஸ்புக் பயன்படுத்துவது குறைந்து வருகிறது இதேப் போல் தான்
மைக்ரோசாப்ட்-ன் நிலமையும் கூகுள் டாக்ஸ் வந்த பின் அதிக
பயானர்கள் கூகுள் பக்கம் திரும்பியுள்ளனர் இதற்க்கு தீர்வாக
இரண்டும் கைகோர்த்து மைக்ரோசாப்ட்-ன் டாக்ஸ் -ஐ இனி
பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் நண்பர்களிடம் எளிதாக
பகிர்ந்துகொள்ளலாம். தன் சேவையை அனைத்து மக்களிடமும்
எடுத்துச்செல்லவும் கூகுள் டாக்ஸ் -க்கு போட்டியாக அதிக
பயனார்களை எளிதாக பிடிக்கும் நோக்கத்துடன் தான் மைக்ரோசாப்ட்
இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பேஸ்புக் வாடிக்கையாளர்கள்
http://docs.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் எல்லா
கோப்புகளையும் பேஸ்புக்-ல் உள்ள அனைவரிடமும் எளிதாக
பகிர்ந்து கொள்ளலாம். இப்படியே சென்றால் கூகுள் டாக்ஸ்-ம்
டிவிட்டரும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails