மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 அதிகாரப்பூர்வமாக வெளிவரும் தேதி

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 மென்பொருள் பதிப்பு அதிகாரப்பூர்வமாக
வெளிவரும் தேதியை அறிவித்துள்ளது இதைப்பற்றித் தான் இந்த
பதிவு.

அனைத்து ஆன்லைன் ஆபிஸ் மென்பொருளுக்கும் முடிவு கட்டும்
நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அதிவேகம் மற்றும் பல
சேவைகளையும் கொண்டு மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 மென்பொருள்
வரும் ஏப்ரல் 27 ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 2009 -ல் 7.5 மில்லியன் மக்கள் மைக்ரோசாப்ட்-ன்
ஆபிஸ் 2010 பீட்டா பதிப்பை பயன்படுத்தி அதன் குறை நிறைகளை
பகிர்ந்து கொண்டனர். அனைத்து மக்களின் ஆதரவுடன் ஆபிஸ் 2010
குறைகளை நீக்கி பயன்பாட்டை அதிகரித்து விறபனைக்காக வர
இருக்கிறது ஆபிஸ் 2010 -ல் அதிகமாக ஆன்லைன் பயன்பாடு இருக்கும்
கூடவே இலவசமாக கோப்புகளை சேமிக்க இடம் கொடுக்கும்
சேவையும் தொடங்கலாம். கூகுள் ஏற்கனவே தன் ஆன்லைன்
சேவையான கூகுள் டாக்ஸ் தொடங்கிவிட்டாலும் மைக்ரோசாப்ட்
தான் இதற்க்கு சரியான போட்டியை கொடுக்கும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails