இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்

April 26, 2010

விடுமுறை தொடங்கிவிட்டது நம் நண்பர்களுக்கும் தோழிகளுக்கும்
விடுமுறை மற்றும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை எப்படி
அனுப்பலாம் என்று பார்க்கப்போகிறோம் இதைப்பற்றித்தான்
இந்த பதிவு.

படம் 1

பிறந்த நாள் வாழ்த்து முதல் திருமண நாள் வாழ்த்து வரை அனைத்து
திருவிழாவுக்கும் வாழ்த்து அட்டைகளை எளிதாக உடனடியாக
உருவாக்கி நம் நண்பருக்கும் உறவினருக்கும் எளிதாக அனுப்பலாம்
இதற்க்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.

படம் 2

படம் 3

இணையதள முகவரி : http://www.cardsimple.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
send this card என்ற பட்டனை அழுத்தவும் அடுத்து படம் -2 ல்
காட்டியபடி நாம் அனுப்பும் வாழ்த்துச்செய்தியை தட்டச்சு செய்யவும்.
தட்டச்சு செய்து முடித்ததும் அனுப்புபவரின் பெயர் மற்றும் இமெயில்
முகவரி அடுத்து பெறுநர் பெயர் மற்றும் இமெயில் முகவரியை
கொடுத்து என்றைக்கு வாழ்த்துச்செய்தி கிடைக்க வேண்டும் என்ற
தேதியைம் கொடுத்து preview என்ற பட்டனை அழுத்தவும் எந்த
கணக்கும் தேவையில்லை. இப்போது படம் 3-ல் காட்டியபடி
send card என்ற பட்டனை அழுத்தி படத்தை எளிதாக அனுப்பலாம்.
பல்வேறுபட்ட வாழ்த்துச்செய்திக்கான அட்டை மற்றும் செய்தியும்
உள்ளே இருக்கிறது இதில் நமக்கு ஏது வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து இதே போல் எளிதாக அனுப்பலாம்.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails