உதாரணமாக, Saaral SMS சேனலானது சாரல் சமூக நல அமைப்பின்செயல்பாடுகளை அதன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் நம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் (உதாரணமாக:A Candle loses nothing by lighting another candle), சமூக அக்கறையுள்ள பொது அறிவுத் தகவல்களையும் (உதாரணமாக:Save Energy,Save Earth-National Energy Conservation Day Wishes(Dec 14)-SAARAL) பகிர்ந்து வருகின்றது. இது தனது உறுப்பினர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வருகிறது.
சாரல் அமைப்பின் SMS சேனலுக்கு Subscribe செய்ய இங்கே வசிக்கவும்.
கூகிள் SMS சேனலின் சிறப்பம்சங்கள்:
• நாமாக புதிய SMS சேனல் உருவாக்கிக் கொள்ளலாம்.இதன் மூலம் நண்பர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் தங்களுக்கென்று ஒரு SMS சேனலைத் தொடங்கலாம்.ஏற்கனவே பல உபயோகமுள்ள சேனல்கள் உள்ளன.உதாரணத்திற்கு: NDTV National News, Business Line etc.சுனாமி, புயல் எச்சரிக்கை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.
• நாம் அனுப்பும் செய்தியை அலைபேசி, கூகுள் இணையதளம், நம் இணையத்தின் RSS Feed மூலம் அனுப்பலாம்.
• நாம் சேர்ந்துள்ள SMS சேனலில் நம்முடைய மொபைல் எண் மற்றவர்களுக்குத் தெரியாது.
• நாம் SMS பெற நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு: 05:00 AM to 10:00 PM
• தேவையான SMS ன் எல்லையை வரைமுறை செய்யலாம்.உதாரணத்திற்கு: Max SMS per Day:50
• எந்த நேரத்திலும் SMS சேவை பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்.
கூகிள் SMS சேனலில் இணையும் முறை:
• Nick Name செட் செய்யவும்
• மொபைல் எண் கொடுக்கவும்
• மொபைலுக்கு வரும் Code டைப் செய்யவும்
• விருப்பமான SMS சேனலுக்கு Subscribe செய்யலாம்.Eg:Saaral
0 comments:
Post a Comment