Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

0 comments
இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது  ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும். 
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். 
  • இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை.
  • முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
  • இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
  • இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution)  இந்த வரியை கொடுக்கவும். 
  • அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

(OR)

  • உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
  • நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும் இல்லையேல் NO VIDEOS FOUND என்ற

2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்

0 comments
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்.

(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம் மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

(சிறந்த ஹீரோ ஒரு தமிழன் - CNN இணையதளத்தில்)

41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.

0 comments

அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா போன்ற 41 நாடுகளுக்கு
இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம் எப்படி என்பதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx
41 நாடுகளுக்கு மட்டும் தான் நாம் இலவசமாக இந்ததளம்
மூலம் பேக்ஸ் அனுப்ப முடியும். இந்தியாவிற்கு பேக்ஸ்
இலவசமாக அனுப்பும் வசதி இந்த தளத்தில் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா,கொரியா,இத்தாலி,பிரான்ஸ்,
இஸ்ரேல் போன்ற மற்ற அனைத்து (41) நாடுகளுக்கும் நாம்
இந்த இணையதளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு பேக்ஸ் செய்தி மட்டுமே அனுப்ப
முடியும். 178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான
கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம்
பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
வெளிநாட்டு வேலைக்கு பேக்ஸ் அனுப்பும் நம் தமிழ்
நண்பர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி

0 comments

ஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.

                               முதலில் உங்கள் ஜிமெயில் கணக்குக்குள் நுழையவும்


                                                   




 ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another   address கிளிக் செய்யவும்.



 இங்கு எந்த ஈமெயிலை Link seiya வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்


.




                                          
                                              Send verification கிளிக் செய்யுங்கள்
                                      

அடுத்து     VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில்       கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification   ஈமெயில் வரும்.
அங்கு சென்று Confirmation code number யை  verification box யில் தந்து விடுங்கள்.




வேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose  பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown  வந்திருக்கும் அதில் நீங்கள்  கேட்ட  ஈமெயில்  கணக்கு    வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள்  நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.

அதிகம்  பயன்படுத்தாத   சில   கணக்கை   லிங்க்   செய்து  கொள்ளுங்கள்.சில சமயம்  அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்
கணக்கிலிருந்தே  நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.

முப்பரிமான (3D ) ல் இணையத்தை பயன்படுத்த 3D Browser இலவச பயன்பாட்டிற்கு .

0 comments
             3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் .

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் IE ,Firefox போன்ற Browser கள் 2D வடிவில் வழி பக்கங்களை காட்டுகின்றன. 3D browser கள் மூலம்  நமது வலைபக்கங்களை பார்க்கும் போது ஓரளவுக்கு மட்டுமே முப்பரிமான உணர்வு கிடைக்கும் , On line Shopping , Gaming போன்ற தளங்களில் இதன் பயன்பாடு அதிகம்.youtube போன்ற தளங்களில் வித்தியாசம் தெரியும் .இந்த பதிவை 3D browser இல் தான் பதிவிடுகிறேன் ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை  .

பல நிறுவனங்கள் இந்த 3D Browser வசதியை வழங்கினாலும் அவை பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை . Browse3D என்ற இணையதளம் SpaceTime3D என்ற இலவச Browser இலவசமாக வழங்குகிறது .

முப்பரிமான வசதியுடன் இதில் பல கூடுதல்  அம்சங்கள் உள்ளன   Navigation Button - இதன் வலைபக்கத்தை மேலும் கீழும் இடம் வலம் மாற்ற இயலும் , ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஒரே Tab ல் செல்லமுடியும் .

Screenshot Button- பக்கத்தை Screenshot செய்ய முடியும் .

இன்னும் print ,print preview வசதிகளும் உள்ளன .Screenshot எடுக்கப்பட்ட .இந்த படத்தை பாருங்கள்

இதில் open New Window, New Tab option கள் இல்லை , ஏனென்றால் ஒரே பக்கத்தில் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பக்கங்களை ஒரே Tab ல் பார்க்கலாம், தேவையானதை தேர்ந்தெடுக்கலாம் .

இது சிறப்பான ஒரு3D Browser என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கென  அதிக நேரமும் எடுத்துக்கொள்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு
உபயோகித்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்
இதனை Download செய்ய Click Here

உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க...

0 comments

கம்ப்யூட்டர் நம் வாழ்வின் இணையாக, தோழனாக, இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டது. நம் உடல் நலனைப் பாதுகாப்பது போல இதனையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.


அதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.


01. ஆண்ட்டி வைரஸ்:
கம்ப்யூட்டர் இயங்கும் போது எப்போதும் வைரஸ் தடுப்பு தொகுப்பு ஒன்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் இந்த தடுப்பு தொகுப்புகளைப் பெறலாம். இவற்றை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்தல் மிக முக்கியமானது. அப்போதுதான், அன்றாடம் உருவாகும் வைரஸ்கள் மற்றும் கெடுக்கும், தகவல் திருடும் தொகுப்புகளிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கலாம். இலவச தடுப்பு திட்டங்கள் பல கிடைத்தாலும்,

கீழ்க்கண்டவை நிலையான நல்ல பயன்பாட்டைத் தருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ்(AVG Antivirus): http://www.avg.com/inen/liteproductavgantivirusfree

2. அவிரா பெர்சனல் பிரீ ஆண்ட்டி வைரஸ் (Avira Personal Anti Virus) http://www.freeav.com/en/download/1/download_avira_antivir_personal_free_antivirus.html.)

3.அவாஸ்ட் ஹோம் எடிஷன் பிரி ஆண்ட்டி வைரஸ் (Avast Home Edition Free Antivirus):http://www.avast. com/eng/avast_4_home.html)


02. பயர்வால்:
ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன், திருட்டுத்தனமாக நம் கம்ப்யூட்டர்களுக்குள் நுழைய வரும் புரோகிராம்களைத் தடுக்கும் பயர்வால் அமைப்பினை, நம் கம்ப்யூட்டர்களில் அமைக்க வேண்டும்.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைப் போலவே, இணையத்தில் இலவச பயர்வால் தொகுப்புகளும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

1.ஸோன் அலார்ம் பிரீ பயர்வால் (Zone Alarm Free Firewall):http://www.zonealarm.com.

2.பிசி டூல்ஸ் பயர்வால் ப்ளஸ் (PC Tools Firewall Plus)http://www.pctools.com/firewall/

3.கொமொடோ இன்டர்நெட் செக்யூரிட்டி(Comodo Internet Security)http://personalfirewall. comdo.com/


03. நாள் பட்ட பைல் நீக்கம்:
பாதுகாப்பு தொகுப்புகளை நிறுவிய பின், நாம் எப்படி நம் கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கிறோம் என்பதனை எண்ணிப் பார்த்து, அவற்றை நீக்குதல் நலம் தரும்.

வெகுநாட்களாகப் பயன்படுத்தாத கோப்புகள், ஒரே பெயரில், பல ட்ரைவ்களில் சேமிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் சில ஆவணக் கோப்புகள், திருத்தி அமைத்த பின்னும், அதன் பழைய ஆவணக் கோப்புகள், இணையத்தில் செல்கையில் இறக்கப்படும் தற்காலிகக் கோப்புகள் எனப் பல கோப்புகளை நாம் ஹார்ட் டிஸ்க்கில் வைத்து, கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை மட்டுப் படுத்துகிறோம்.

இதே போல் அழிக்கப்படும் பைல்கள் எப்போதும் ரீசைக்கிள் பின் நிறைந்து வழியும் வகையில் நிரப்புகிறோம். ஒரே சாப்ட்வேர் அப்ளிகேஷன் சார்ந்த பழைய பதிப்புகளின் மூலக் கோப்புகளைத் தேவையில்லாமல் வைத்திருக்கிறோம்.

வாரம் அல்லது மாதம் ஒருமுறை இவற்றை நீக்கினால், கம்ப்யூட்டர் நலமாக, அதிகப் பயன்தரும் வகையில் இயங்கும்.


04. ரெஜிஸ்ட்ரி சுத்தம் செய்திடுக:
தேவைப்படாத சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை நீக்கினாலும், இவை ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்திய பல நூறு வரிகள், அப்படியே தங்கி, நம் இயக்க வேகத்தினைக் குறைக்கும். நாமாக இவற்றை நீக்க முயன்றால், ரெஜிஸ்ட்ரிக்குப் பாதிப்பு ஏற்பட்டு, இயக்க வேகம் குறையும். இவற்றை நீக்க இணையத்தில் இலவச ரெஜிஸ்ட்ரி கிளீனர்கள் கிடைக்கின்றன.

இவற்றில் சில கிடைக்கும் முகவரிகளை இங்கு காணலாம்.

1.ரெஜிஸ்ட்ரி மெக்கானிக் (Registry mechanic): http://www.pctools. com./registrymechanic)

2.ரெஜிஸ் ட்ரி ஈஸி (Registry Easy):http: //www.regeasy cleaner.com

3.ரெஜிஸ்ட்ரி பிக்ஸ் (Registry Fix):http ://www.registryfix. com


05. ஸ்பைவேர் தொகுப்பு இயக்குதல்:
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மற்றும் பயர்வால் தொகுப்புகளைப் போல, நம் கம்ப்யூட்டரில் நாம் அறியாமல் வந்திறங்கும், நம் பெர்சனல் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்கும் தொகுப்புகளையும் நாம் பதிந்து இயக்க வேண்டும்.

ஸ்பைவேர், மால்வேர், அட்வேர் எனப் பல பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இந்த வகை புரோகிராம்களும் கம்ப்யூட்டர் இயக்கத்தினை மட்டுப்படுத்தும். தகவல்களைத் திருடும் பட்சத்தில், பெரிய அளவில் இழப்பையும் ஏற்படுத்தும்.

இலவச ஸ்பைவேர் புரோகிராம்கள் கிடைக்கும் தள முகவரிகள் கீழே தரப்படுகின்றன.

1. அட் அவேர் பிரீ (AdAware Free):http://www.lavasoft. com/ products/ad_ aware_free.php

2.ஸ்பைஸ்பாட் சர்ச் அண்ட் டெஸ்ட்ராய் (Spyspot Search & Destroy): http://www.safernetworking.org/en/ spybotsd/index.html

3. விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) http://www. microsoft. com/windows /products /winfamily/ defender/ default.mspx மேலே கூறப்பட்டுள்ள பலவகை இலவச புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் முன், அவை குறித்து அந்த தளங்கள் தரும் குறிப்புகளைப் படிக்கவும். உங்கள் தேவைகளுக்கு எந்த புரோகிராம் உதவுமோ, உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரின் வடிவமைப்பிற்கு எது உகந்ததாக இருக்குமோ, அதனை டவுண்லோட் செய்திடவும்.


06. அற்றைப்படுத்துதல்(Updating):
கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அன்றைய புதுப்பிக்கப்பட்ட வழிகளைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும். பொதுவாக இத்தகைய புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டர் இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், தாமாகவே அவற்றின் தாய் தளம் சென்று, அற்றைப் படுத்தலுக்கான கோப்புகள் இருந்தால், சில உங்களுக்கு தகவல் தந்து, அனுமதி கேட்டு அப்டேட் செய்திடும். சில புரோகிராம்கள் தாங்களாகவே அப்டேட் செய்திடும். இதில் எது உங்களுக்குச் சரி எனத் தோன்றுகிறதோ, அதன்படி அவற்றை அமைத்து இயக்கலாம்.


07.ராம் நினைவகத் திறன் கூட்டல்:
கம்ப்யூட்டர் இயக்கத்தில் மையமாக இயங்குவது ராம் மெமரி (RAM Memory) எனப்படும் நினைவகமாகும். இங்கு தான் நம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், நாம் தயாரிக்கும் பைல்கள் தங்கி இயங்குகின்றன.

நாம் கம்ப்யூட்டர் வாங்கும் போது போதுமானதாகத் தோன்றும் இவை, நாளுக்கு நாள் வரும் புதிய சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும். இதனால் கம்ப்யூட்டர் இயக்கத்தின் வேகம் குறையும். எனவே, இந்த மெமரியின் கொள்ளளவினை அதிகப்படுத்த வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டரில் என்ன வகை ராம் உள்ளது என்று கண்டறிந்து, எப்படிப்பட்ட ராம் மெமரி சிப்பை வாங்கினால், கம்ப்யூட்டரின் மதர்போர்டில் இணைக்க முடியும் என்று அறிந்து, அதனை வாங்கி இணைக்கவும்.


08. கோப்புகள் பாதுகாப்பு:
கம்ப்யூட்டர்கள் எந்த நேரத்திலும் செயல் இழந்து முடங்கிப் போகும் என்பதால், நாம் அவற்றில் உருவாக்கும் முக்கிய கோப்புகளுக்கு, உபரி நகல் ஒன்று உருவாக்கி, அவற்றைப் பாதுகாப்பாக பதிந்து வைக்க வேண்டும். சிடி, டிவிடி, பிளாஷ் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு ட்ரைவ் எனப் பலவகைகளில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.


09. தூய்மைப்படுத்தல்:
இப்போதெல்லாம், மூடிய குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டுமே கம்ப்யூட்டர் இயக்கப்படுவதில்லை. சாலை ஓரங்களில் இயங்கும் பலசரக்கு கடைகளில் பாருங்கள். கிலோ கணக்கில் பறக்கும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயக்கப்படுகின்றன.

வீடுகளிலும் தூசுகளுக்கு நடுவே தான் இவை இயங்குகின்றன. எனவே எந்த அளவிற்கு தூசு அதிகமோ, அவ்வளவு குறைந்த நாட்கள் இடைவெளியில், கம்ப்யூட்டரைத் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டு, சிபியு, மதர்போர்டு உள்ள டவர், மவுஸ், ஸ்கேனர், பிரிண்டர் என அனைத்தையும் சுத்தப்படுத்த வேண்டும்.


10. தொடர் மின் வழங்கல்:
மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால், கம்ப்யூட்டர்களின் இயக்கம் திடீரென நின்று போகும். இது கெடுதலை விளைவிக்கும். எனவே நல்ல யு.பி.எஸ். ஒன்றுடன் இணைத்து மட்டுமே கம்ப்யூட்டரை இயக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்களின் இயக்கத்தை எப்போதும் முறைப்படி நிறுத்த வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக, அதற்கு மின் இணைப்பு தரும் சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது.

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் ( உத்தியோகபூர்வமானது)

0 comments

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

Download Skype 5.0 here

 
 

Google Earth மென்பொருளை இணைய இணைப்பு இல்லாத கணினியிலும் பயன்படுத்தலாம்

1 comments

Google Earth மென்பொருளானது எல்லோரும் அறிந்ததே இந்த மென்பொருளைப் பயன்படுத்தவதாயின் இணைய இணைப்பு அவசியமாகும். இணைய இணைப்பு இல்லாதகணினிகளில் Google Earth மென்பொருளை Install செய்தாலும் பயன்படுத்த முடியாது. 


    உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் இணைய இணைப்பு இருக்கும் ஆனால் அங்கு Google Earth இல் சுதந்திரமாக பயன்படுத்த நேரம் இருக்காது. இப்படியானவர்களுக்கு Google Earth மென்பொருளை இணைய இணைப்பு இல்லாத கணினியிலும் பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதுதான் Cache Memory. இந்த Cache Memory இனை Copy செய்து உங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் Past செய்வதன் மூலம் நீங்கள் Copy செய்த Cache Memory எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப பயன்படுத்தலாம்.

இந்த Cache Memory இனை எப்படி Copy செய்வது இது எங்கு இருக்கும்?

முதலில் உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் அல்லது Internet Browsing Center இற்குச் சென்று Google Earth இனை Download செய்து Install செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Google Earth மூலம் உங்களுக்குத் தேவையான இடங்களை ஒரு தடவை Zoom செய்யுங்கள் (நீங்கள் இப்பொழுது பார்க்கும் இடங்களே Cache Memory இல் பதியப்படுகின்றன.) இனி Streaming 100% என்று முடிந்ததும் Google Earth இனை Close செய்துவிட்டு.


    கணினியில் My Computer இனை Open செய்து Tools > Folder Options... > View > Show Hidden File And Folders என்பதை Select செய்து OK  இனை அழுத்தவும். (இது கணினியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள Folder களை காட்சிப்படுதுவதற்கான முறையாகும்.)

    இனி C:\Documents and Settings\"USER" என்ற இடத்திற்குச் செல்லவும் அங்கு  முதலில் Local Settings என்ற Folder இனுள் Application Data\Google\GoogleEarth என்ற Folder இனுள் உள்ள அனைத்து File, Folder களையும் அப்படி உங்களிடமுள்ள Pendrive இல் Copy செய்யவும். அடுத்து  மீண்டும் C:\Documents and Settings\"USER" இற்கு வந்து Application Data என்ற Folder இனுள் Google\GoogleEarth என்ற இடத்திற்கு வந்து அங்குள்ள அனைத்து File களையும் Pendrive இல் Copy செய்யவும்.


    இனி உங்கள் வீட்டிலுள்ள கணினியில் (இணைய இணைப்பு இல்லாத கணினியில்) Google Earth இனை Install செய்யவும். நீங்கள் Pendrive இல் Copy செய்த File களை உங்கள் கணினியில் முறையே அந்த அந்த சரியான இடங்களில் Past செய்யவும். இப்பொழுது Google Earth இனை Open செய்து பார்க்கவும் நீங்கள் அங்கு Cache Memory யில் இருந்து Copy செய்துவந்த அனைத்து இடங்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இது நான் எனது கணினியில் பரிசோதித்து வெற்றிகரமாக வேலைசெய்கிறது.
இந்த பதிவில் ஏதாவது சந்தேகம், பிரச்சினைகள் இருந்தால் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Google Earth Offline Installer (Full Setup File) இனை Download செய்ய இங்கு Click செய்யவும். 

AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற

1 comments

கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும்.

இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது.

MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.

மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.

தரவிறக்கச் சுட்டி
click here to download

உபுண்டுவில் random password உருவாக்க ஒரு ஸ்கிரிப்ட்

0 comments
முதலில் டெர்மினலில் ஒரு டெக்ஸ்ட் கோப்பினை திறந்து கொள்ளவேண்டும். பின்னர் கீழ்கண்ட வரிகளை அதில் காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.

#!/bin/bash
# This script creates a random password using sha1sum

MASTONE=x
MASTTWO=y

while [ $MASTONE != $MASTTWO ] ; do
echo "Enter the master password"
read -s MASTONE
echo "Retype the master password"
read -s MASTTWO
if [ $MASTONE != $MASTTWO ] ; then
echo "Password entries don't match, try again" 1>&2
fi
done

echo "Enter the reason"
read -s REASON
echo "Enter desired number of characters"
read -s DESNUM
echo
echo "Your random password is:"
echo $MASTONE $REASON | sha1sum | cut -c1-$DESNUM
echo


மேற்கண்ட இந்த ஸ்கிரிப்டை நான் pass.sh என்ற ஒரு டெக்ஸ்ட் கோப்பில் காப்பி செய்து சேமித்துள்ளேன். அவரவர் விருப்பம் போல் கோப்பிற்கு பெயர் கொடுத்துக்கொள்ளலாம்.

பின்னர் இந்த கோப்பினை இயங்கு நிலையில் வைக்க டெர்மினலில்

sudo chmod +x pass.sh

இந்த நிரலை இயக்குவதற்கு டெர்மினலில்

./pass.sh என்று தட்டச்சு செய்யவேண்டும். இப்போது நிரல் இயங்க தொடங்கியதும். ஒரு சில கேள்விக்கு பதில் தட்டச்சு செயதவுடன் கடவுச்சொல் வந்துவிடும்.

Download As PDF

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி??????????

0 comments
உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................
பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................

முறை : 2, மற்றும் முறை : 3, ஆகியவை அடுத்த பதிவில் எழுதுகிறேன்......................

ஜீமெயிலில் பாஸ்வேர்ட் திருட்டை தடுக்க நம் மொபைல் எண்ணை கொடுக்கலாம்.

0 comments

நம் இமெயிலின் கடவுச்சொல் மறந்துவிட்டது என்றால் உடனடியாகஜீமெயிலில் சென்று கடவுச்சொல் மறந்துவிட்டது என்று கூறினால்போதும்  நம் அலைபேசிக்கு ஜீமெயில் இருந்து கோடு ஒன்றை அனுப்பி விடுகின்றனர். இதில் வரும் கோடை பயன்படுத்தி புதிய கடவுச்சொல்லை உருவாக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1
ஜீமெயில் செக்யூரிட்டி சற்று வளர்ந்து கொண்டு தான் வருகிறது.
நம் அலைபேசி எண்ணை நம்முடைய ஜீமெயில் கணக்கில் சேர்ப்பதன்
மூலம் எளிதாக நம் கடவுச்சொல்லை மாற்றி அமைக்கலாம்.
படம் 2
படம் 3
கூகுளின் Manage Account  என்ற இந்த பக்கத்திற்குச் சென்று
நம் ஜீமெயில் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து வரும்
திரை படம் 1- ல் காட்டியபடி இருக்கும் இதில் Change Password Recovery
options என்பதை சொடுக்கவும். அடுத்து ஒரு முறை Verify- க்காக
நம் கணக்கின் கடவுச்சொல்லை கூகிள் கேட்கும் அதற்கும் நம்
கடவுச்சொல்லை கொடுத்ததும் படம் 2-ல் உள்ளது போல் திரையில்
வரும் இதில் SMS என்பதில் Add a Mobile Phone Number என்பதை
சொடுக்கியதும் படம் 3-ல் உள்ளது போல் வரும் இதில் நாம்
இருக்கும் நாட்டையும் நம் அலைபேசி எண்ணையும் கொடுத்துவிடவும்
Save என்ற பொத்தானை அழுத்தி சேமித்துவிட்டு வெளியே
வரவும். இப்போது நம் கடவுச்சொல் மறந்துவிட்டால் கூகுளின்
ஜீமெயில் தளத்திற்கு சென்று Can’t access your account? என்பதை
சொடுக்கி நம் பயனாளர் பெயரை கொடுத்தால் மட்டும் போதும்
உடனடியாக ஒரு நான்கு இலக்க எண்ணை நம் அலைபேசிக்கு
அனுப்பி விடுகின்றனர் அடுத்துவரும் திரையில் நாம் அலைபேசியில்
வந்திருக்கும் எண்ணை கொடுத்து புதிய கடவுச்சொல் உடனடியாக
உருவாக்கிக் கொள்லலாம்.

Google ன் சோதனை முயற்சி – 1GB/S இணைய இணைப்பு

0 comments
கற்பனை செய்து கொள்ளுங்கள்… நீங்கள் ஒரு கிராமத்தில் இருக்கிறீர்கள்… நியூயார்க்கில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் அதுவும் 3D படமாக…

இல்லையெனில் மதராசப்பட்டினம் போன்ற ஒரு முழு நீளத் (நீலமல்ல) திரைப்படத்தை ஐந்தே நிமிடத்தில் உங்கள் கணினிக்கு தரவிறக்க வேண்டும்…
உங்களைப் போன்ற கல்வி பயின்ற அறிஞர்களுடன் இணையத்தில் நேரடியாக அதே சமயம் உடனுக்குடன் உரையாட வேண்டும்….
இதெல்லாம் சாத்தியமா?

சாத்தியம்… Google அறிவித்துள்ள  Google Fiber for Communitiesஎன்னும் சேவை மூலமாக. 1 GB/S வேகத்தில் இணைய சேவையை வழங்கப் போவதாக அறிவித்துள்ள இந்நிறுவனம் சோதனை முயற்சியாக 50,000 முதல் 5,00,000 வீடுகளுக்கு வழங்கப் போகிறது என அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தங்கள் நாட்டில் Google ன் புதிய சேவை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இது பற்றிய காணொளி:
http://www.youtube.com/watch?v=wusklcNKDZc

நம்முடைய பிலாக்கரில் "Facebook Like Box" கொண்டுவர

0 comments

நம்முடைய பிலாக்கரில் "Facebook Like Box" கொண்டுவருவது எப்படி என்று இங்கு காண போகிறோம். இதை நம் பிலாக்கரில் பொருத்துவதன் மூலம் நம்முடைய வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் மற்றும் நம்முடைய பிலாக்கின் Alexa Rank  ஐ உயர்த்த முடியும். இதை நம் தளத்திருக்கு கொண்டுவர முதலில் நீங்கள் பேஸ்புக்கில் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் இல்லை என்றால் www.facebook.com தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.
  • முதலில் இந்த லிங்கில் செல்லவும் http://www.facebook.com/pages/learn.php 
  • வலது பக்க மூலையில் உள்ள Create a Page என்ற பட்டனை அழுத்தவும். 
  • அதில் உங்கள் பக்கத்தின் பெயர் மற்றும் உங்களுடைய பக்கத்தின் நோக்கம் ஆகிய விவரங்களை கொடுத்த பிறகு Create Official Page என்ற பட்டனை க்ளிக் செய்து கொள்ளவும்.

இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

  
இதில் நான் காட்டியுள்ள படி விருப்பம் or Like என்று இருப்பதில் நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு மேலே address பாரில் அந்த பக்கத்தின் id வந்திருக்கும் அதை கவனமாக குறித்து கொள்ளுங்கள். 

அடுத்து இந்த லிங்கில் செல்லுங்கள் http://developers.facebook.com/docs/reference/plugins/like-box இந்த லிங்கில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.   


படத்தில் நான் காட்டியுள்ள படி மாற்றங்கள் செய்து Get Code என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு உங்களுடைய widget Code கிடைக்கும்.  


படத்தில் காட்டியுள்ள கோடினை காப்பி செய்து உங்கள் தளத்தில் Blogger அக்கௌண்டில் நுழைந்து
  • Dassboard
  • Design
  • Add a Gadget
  • Html/ JavaScript -  சென்று பேஸ்ட் செய்து Save செய்தால் உங்களுடைய தளத்தில் Facebook Like Box வந்திருக்கும்.  
     

இந்திய‌ர்களுக்கான புதிய பிர‌வுச‌ர் அறிமுக‌ம்

0 comments

இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .
எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே இணைய உலகில் பாடு ஓட்டர்ஸ் எனும் இணைய தளத்தை நடத்தி புகழ்பெற்றவர் இவர். தேஜஸ் வியாஸ் உள்ளிட்ட தனது நண்பர்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை அலோக் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரவுசர் தேவை என்பதை உணர்ந்து எபிக் பிரவுசரை வடிவமைத்துள்ளது.
புகழ் பெற்ற எக்ஸ்புளோரர், ஓபரா, கூகுலின் குரோம், மோசில்லாவின் பயர்பாக்ஸ் என பல பிரவுசர்கள் இருந்தாலும் தனித்துவமான பல அம்சங்களோடு இந்தியர்களுக்கென்று எபிக் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான முதல் பிரவுசர் என்று பெருமிதம் கொள்ளும் இந்நிறுவனம் உலகிலேயே வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை கொண்ட முதல் பிரவுசர் இது என்றும் கூறுகிறது. எனவே இந்த பிரவுசரை பயன்படுத்தினால் வைரஸ் தொல்லை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
அதோடு ஆபத்தான தளங்கள் பற்றிய எச்சரிக்கையும் இந்த பிரவுசரிலேயே கிடைக்கும். இணைய தளங்கள் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகையான பிஷ்ஷிங் மோசடி குறித்தும் இந்த தளம் இணையவாசிகளை எச்சரிக்கை செய்தவண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையவாசிகளின் தனிப்பட்ட விவரங்களும் இந்த பிரவுசரில் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தன்மையோடு கூடிய எண்ணற்ற வசதிகள் இந்த பிரவுசரில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரவுசர் தனக்கென வேர்ட் பிராஸசர் கொண்டுள்ளதால் தமிழ் உள்பட 12 இந்திய மொழிகளில் இந்த பிரவுசரை கொண்டு சுலபமாக டைப் செய்யலாம்.
மேலும் திரைப்பட பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், பிராந்திய மொழிகளில் செய்தி, பங்குச்சந்தை விவரங்கள் என 1000க்கும் மேற்பட்ட வசதிகளுக்கான செயலிகளும் இந்த பிரவுசரில் இணைக்கப்பட்டுள்ளது. ஜி மெயில், ஆர்குட் போன்ற சேவைகளையும் இதிலிருந்தே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவற்றோடு பயர் பாக்சுடன் இணைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளக்கின் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரவுசரின் மற்றொரு சிறப்பம்சமாக யுடியூப் போன்ற வீடியோ தளங்களை பார்க்கும் போது பிரவுசருக்குள்ளேயே சின்னதாக தனியே ஒரு பெட்டி தோன்றும். அதில் வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
எபிக் பிரவுசர் டாட் காம் என்ற இணைய தளத்தின் மூலம் இந்த பிரவுசரை இணையவாசிகள் டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம்.

ஒரே நேரத்தில் Extensions fileகளை மாற்றலாம்(மென்பொருள் இல்லாமல்).

0 comments
  • அதிகமான word document  fileகளை Email இல் அனுப்ப முடியாது. அதற்கு அந்த word document  fileகளை Winzipஆக மாற்றுவோம்.இதை ஒவ்வொரு fileகளை மாற்றுவதற்கு நேரம் அதிகமாகிவிடும்.
  •  ஒரு நொடியில் எல்லா word document  fileகளை Winzipஆக மாற்றலாம்.எந்த மென்பொருள் இல்லாமல்  மாற்றலாம்.அதை பற்றி பார்போம்.


  •  Notepad யை open பண்ணவும்,அதில் ren *.doc *.rarஇதை அடித்து வீட்டு  save பண்ணும்போதுfilename.bat(filename இல்லாமல் ஏதாவது name யை கொடுக்கலாம்) என்று save பண்ணவும்.
  •  நீங்கள் எந்த drive இல் word document  fileகளை Winzipfileகளாக மாற்ற வேண்டுமோ அந்த drive இல்filename.bat file யை save பண்ணவும். filename.bat file யைdoubleclick செய்யவும்.எல்லா winzip fileகளாக மாறி இருக்கும்.
  •  இதேபோல் எல்லா  Extensions fileகளை மாற்றலா
    ம்

டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு

0 comments
 வணக்கம் நண்பர்களே உங்களுக்கு டெஸ்க்டாப்பில் இருக்கும் ஒரு பைலை திறக்கவேண்டும் டாஸ்க் பார் இருந்தால் அதன் வழியாக டெஸ்க்டாப் எளிதாக சென்று விடலாம் ஒரு வேளை இந்த டாஸ்க் பார் உங்கள் கணினியில் காணவில்லையென்றால் திறந்திருக்கும் அனைத்து விண்டோவையும் மினிமைஸ் செய்த பின் தான் டெஸ்க்டாப்பை அடைய முடியும் நண்பருக்கும் இந்த பிரச்சினை தான் ஏற்பட்டிருக்கிறது இது போன்ற பிரச்சினைகள் சாதரணமாக இயங்குதளம் நிறுவும் போது ஏற்படும் தவறுகள் அல்லது வைரஸ் பிரச்சினைகளாலும் வரலாம் அல்லது தவறாக பைல்களை அழிப்பதன் மூலமாகவும் வரலாம்.



சரி இந்த பிரச்சினைக்கு தீர்வாக நாம் நமது ரெஜிஸ்டரியில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் திரும்ப கொண்டு வந்து விடலாம் ஆனால் தெரியாதவர்கள் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டுவருவது பிழையானால் மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டிவரும் சரி நண்பருக்கு எப்படி பிரச்சினையை சரி செய்வது என இனையத்தில் தேடிய போதுதான் ஒரு அழகான மென்பொருள் கிடைத்தது இதன் அளவு வெறும் 172கேபி தான் ஆனால் அது 5டாலர் விலை மதிப்புள்ளது சரி அதை கிராக் செய்யமுடியுமாவென தேடியபோதுதான் அதற்கும் கிராக் பேட்ஜ் கிடைத்தது நீங்கள் TaskbarRepairToolPlus என்பதை இயக்கி பாருங்கள் உங்களுக்கு படத்தில் உள்ளது போல செய்தி வரும்.



இப்போது நீங்கள் இந்த பொதியை தரவிறக்கவும் அதனுள்ளே இருக்கும் Patch என்பதை இருமுறை கிளிக்கி திறக்கும் பக்கத்தில் Select என்பதை கிளிக்கி அதன் மூலம் TaskbarRepairToolPlus! பிரவுஸ் செய்து Patch என்பதை கிளிக்கினால் இந்த மென்பொருள் கிராக் செய்யப்பட்டுவிடும் சந்தேகத்திற்கு படத்தையும் இனைத்துள்ளேன்.



இனி இந்த மென்பொருளின் உதவியோடு 34விதமான பிரச்சினைகளை தீர்க்கலாம் அவை என்ன மாதிரியான பிரச்சினைகள் என்பதை கீழே பாருங்கள்.

Task bar Problems

Taskbar is Missing
Lock Taskbar Greyed Out
Minimized Programs Missing
Stuck in Classic View
Reduce Size of Buttons
Restore to Default
Toolbars Greyed Out or Missing
Remove Specific Toolbars
Remove Icons - Desktop Toolbar
Disable Taskbar Context Menus
Remove Taskbar from Control Panel
Disable Right Click/Properties
Lock Size and Position of the Taskbar
Remove Open, Explore, Find - Start
Remove Open All, Explore All Users
Hide or Show the Taskbar
Hide or Show the Start Button
Repair Icon Views
Restore Taskbar to Default Position
Remove Taskbar Grouping
Repair, Disable/Enable Task Manager


Notification Area 

Hide or Show All Listed Tray Icons
Hide or Show All Inactive Icons
Remove Past Items
Show Missing Icons
Restore/Remove the Clock
Disable Balloon Tips
Remove the Notification Area
Remove Selective Icons
Disable Low Disk Space Warning


Quick Launch Bar 

Can't Create Error Message
Restore Show Desktop Icon
Remove the Quick Launch Area
Save Quick Launch Sort Order
Add Links to Quick Launch


சில நேரங்களில் இப்படித்தான் நண்பரே கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது போல இது போன்ற சிறிய மென்பொருள்கள் மிக அற்புதமாக நம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் என்ன நண்பர்களே இப்போது உங்களுக்கு உபயோகமில்லாதது போல தோன்றலாம் ஆனால் பிரச்சினை எப்போது வருமென்று தெரியாதே அதனால் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதவது உபயோகப்படும்.

டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.

0 comments

பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள் வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில் வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும்இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

டோரண்ட் கோப்புகள் தரவிரக்க பல மென்பொருள்கள் வந்தாலும்
அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல்
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட்
கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.kickasstorrents.com
இந்த தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது
டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும்
கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட்
கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை
அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை
தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா
என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத
கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம்
கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால்
ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை
பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.

கூகிள் வழங்கும் .....!

0 comments


புகைப்படங்களை விரைவாக வெகு விரைவாக இணைத்து இணையத்தில் பகிர்ந்து கொள்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கலாம். Gphotospace மென்பொருள் 7 GB வரை இடம் தருகிறது. விரைவாக Upload செய்யலாம் என்று தலையிலடிக்காமல் சத்தியம் செய்கிறார்கள். 

Firefox 3.0 அல்லது அதற்கடுத்த உலவிகளுக்கான Add-on. வேறு உலவிகள் பயன்படுத்துபவர்கள் இந்தச் சங்கிலியில் தரவிறக்கிக் கொள்ளலாம். அவர்களே படிப்படியாக Download சொல்லித் தருகிறார்கள். Firefox ல் சிறப்பாகச் செயல்படும் என்பது என் தனிப்பட்ட கருத்து!


உங்கள் Gmail ஐ.டி,பாஸ்வேர்ட் கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள். வேறு யாருக்கும் உங்கள் முகவரியைத் தரமாட்டார்கள். இணைக்கும் படங்களை  நமது வலைப்பூவிலும் சேர்க்கலாம். (Picasa மாதிரி). பயன்படுத்திப் பாருங்கள்! 



ஆன்லைன்-ல் ஜீப் ( Gif ) அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்

0 comments

ஆன்லைன் மூலம் நாம் உருவாக்கும் படங்களை நகரவிடலாம் இதற்கு எந்த மென்பொருளும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக நாம் உருவாக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1
நம்மிடம் இருக்கும் படங்களை ஒன்றாக சேர்த்து திரையில் ஒட
வைக்கமுடியும் GIF என்று சொல்லக்கூடிட அனிமேசன் இமெஜ்
மூலம் படங்களை சிறிய அனிமேசனாக சேமித்து வைக்கலாம்.
Gif அனிமேசன் உருவாக்க பல இணையதளங்கள் இருந்தாலும்
நமக்கு மிக மிக எளிதாக ஆன்லைன் மூலம் எந்த மென்பொருள்
உதவியும் இல்லாமல் உருவாக்கலாம்.இதற்காக ஒரு தளம் உள்ளது
இணையதள முகவரி : http://www.createagif.net
படம் 2
இந்த தளத்திற்கு சென்றதும் படம் 1-ல் காட்டியபடி நாம் Image 1,
Image 2  மற்றும் image 3  என்பதற்க்கு அருகில் உள்ள Choose
என்ற பொத்தானை அழுத்தி நாம் அனிமேசன் செய்ய விரும்பும்
படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.எத்தனை படம் வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளலாம் படங்களை தேர்வு செய்து முடித்ததும்
Choose Speed என்பதில் படங்கள் மாறும் வேகத்தை தேர்ந்தெடுத்துக்
கொள்ளவும். தேர்ந்தெடுத்து முடித்ததும் Create என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அவ்வளவு தான் அடுத்த திரையில் (படம் 2)
நாம் சேர்த்த படங்கள் GIF அனிமேசனாக உருவாகிவிடும். படத்தின்
மேல் Right Click செய்து நம் கணினியில் Save image என்பதை
சொடுக்கி சேமித்துக் கொள்ளவும். நாம் உருவாக்கிய இந்த
அனிமேசனை நாம் டிவிட்டர் பேஸ்புக்,ஆர்குட் போன்ற சோசியல்
தளங்களிலும் இங்கிருந்து எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த
தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்
Related Posts with Thumbnails