கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ

மே 7, 2010

இணைய உலாவிகளிலும் முதல் இடத்தை பிடித்துவிட
வேண்டும் என்ற நோக்கில் தினமும் பல வகையான வசதிகளை
கூகுள் குரோம் உலாவியில் புகுத்தி வருகின்றனர் அந்த வகையில்
இப்போது குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய
வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு

இதுவரை எந்த உலாவியையும் இப்படி சோதித்ததில்லை என்று
சொல்லும் அளவிற்க்கு இயந்திரங்களின் உதவியுடன் தன் கூகுள்
குரோம் உலாவியின் வேகத்தை நுனுக்கமாக சோதித்துள்ளது.
அதிநவீன படம் எடுக்கும் கேமிராவின் உதவியுடன் சிறப்பாக
சோதித்துள்ளது. அதாவது வேகமாக வரும் ஒரு பொருள் கணினி
திரையினை தொடங்குவதற்க்கு முன் கட்டளை கொடுக்கிறது அந்த
பொருள் திரையை விட்டு செல்வதற்க்குள் நாம் கட்டளையிட்ட
இணையதளம் வந்து விடுகிறது. ஒரு சோதனை முறை அல்ல
வெவ்வெறுவிதமாக இயந்திரங்களின் உதவியுடன் சோதனை
செய்துள்ளனர் அனைத்திலும் வெற்றி தான்.இதன் வேகத்திற்க்கு
முன் இன்னொரு உலாவி இந்த அளவிற்க்கு செயல்படுமா என்று
தெரியவில்லை பார்பதற்க்கு வியப்பாக இருக்கும்

http://www.youtube.com/watch?v=_oarMXGq3gI&feature=player_embedded

இங்கு சோதிக்கப்பட்டுள்ள கூகுள் குரோம் உலாவியுன் பீட்டா பதிப்பை
இந்த முகவரியை சொடுக்கி தரவிரக்கலாம்.
http://www.google.com/intl/en/landing/chrome/beta/

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails