ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்

மே 5, 2010

ஆன்லைன் -ல் நாம் தட்டச்சு செய்யத வார்த்தை ஒலி கோப்பாக (MP3)
ஆக மாற்றி சேமிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

படம் 2

படம் 3

நண்பர் வெங்கட் ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த வார்த்தையை mp3
ஆக மாற்றுவது எப்படி என்பது பற்றி கேட்டிருந்தார் பல
இணையதளங்கள் வார்த்தையை ஒலிகோப்பாக மாற்றுவதற்க்கு
இருந்தாலும் மிகவும் எளிமையாக அதிவேகமாக நாம் கொடுக்கும்
வார்த்தைகளை mp3 ஆக மாற்றி நம் கணினியில் சேமிக்க ஒரு
இணையதளம் உள்ளது.

இனையதள முகவரி : http://vozme.com

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த
வார்த்தையை ஒலிகோப்பாக மாற்ற வேண்டுமோ அதை தட்டச்சு
செய்துகொள்ளவும் தட்டச்சு செய்து முடித்ததும் யார் நாம் எழுதியைதை
ஆண் குரலில் வேண்டுமா அல்லது பெண் குரலில் வேண்டுமா
என்பதையும் தேர்ந்தெடுத்து படம் 2 -ல் காட்டியபடி தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Create mp3 என்ற பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில்
நாம் கொடுத்த வார்த்தை mp3 கோப்பாக மாற்றப்பட்டு படம் 3-ல்
இருப்பது போல் காட்டப்பட்டுவிடும் இதில் இருக்கும் Download mp3
என்பதை கிளிக் செய்து நம் கணினியில் mp3 கோப்பாக சேமிக்கலாம்.
கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails