ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ
டைப்ரைட்டர் எல்லாம் பழசு என்றாலும் இன்றும் சிலர் தட்டச்சுப் பழக
செல்வது டைப்ரைட்டிங் வகுப்புக்கு தான் ஆனால் எளிதாக நம் வீட்டில்
இருந்தபடியே ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ல் தட்டச்சு
பழகலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்.
டைப்ரேட்டிங் வகுப்பு செல்ல நேரம் இல்லை, அதில் பேப்பரை அங்கும்
இங்கும் நகர்த்த போரடிக்கிறது,ரிப்பனில் மை இல்லை லேசாக
விழுகிறது போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக ஐபேட்
உடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ஐ இணைத்து ஐபேட் திரையில்
பார்த்தபடியே நாம் தட்டச்சு பழகலாம். இதற்க்காக கண்டுபிடிக்கப்பட்டு
உள்ள யுஎஸ்பி டைப்ரைட்டரில் எழுத்துக்களை நாம் அழுத்தும் போது
அது யுஎஸ்பி மூலம் ஐபேட்க்கு இன்புட் ஆக கொடுக்கப்படுகிறது.
இதனால் பேப்பர் செலவு மிச்சம். நாம் டைப் செய்வதை சேமித்து
வைக்கலாம்.இதற்க்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த யுஎஸ்பி
டைப்ரைட்டர்-ன் விலை $75 டாலர் மட்டுமே.
0 comments:
Post a Comment