0 comments

நம் தளத்தில் கூகுள் பஸ் பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்தே உருவாக்கலாம்.


கூகுள் பஸ் பொத்தான் மற்றும் கூகுள் பஸ் எண்ணிக்கை கருவியை
கூகுள் இணையதளத்தில் இருந்து நேரடியாக நம் பிளாக் அல்லது
இணையதளத்தில் எளிதாக எப்படி உருவாக்கலாம் என்பதை
பற்றிதான் இந்த பதிவு.

படம் 1

படம் 2

மலேசியாவில் இருந்து கிருஷ்ணவேணி என்ற சகோதரி கூகுள்
பஸ் பொத்தான் உருவாக்கி எப்படி இணையதளத்தில் சேர்க்க
வேண்டும் என்று கேட்டிருந்தார்கள் அவர்களுடன் நம் நண்பர்கள்
அனைவருக்காகவும் , கூகுள் பஸ் பொத்தான் நம் பதிவுகளை
பிரபலப்படுத்த மட்டுமல்ல நம் தளத்தை பின் தொடர்பவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்கவும் தான் இனி இந்த கூகுள் பஸ்
பொத்தான் நேரடியாக கூகுள் தளத்தில் இருந்து எப்படி
உருவாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

படம் 3

http://www.google.com/buzz/api/admin/site என்ற இணையதளத்திற்க்கு
சென்று நாம் படம் 1ல் இருப்பது போல் Post to Buzz அல்லது
Follow on Buzz எது வேண்டுமோ அதை சொடுக்கவும். உதாரணத்திற்கு
நாம் இப்போது Post to Buzz என்பதை சொடுக்கியுள்ளோம் இப்போது
படம் 2 -ல் இருப்பது போல் வந்துவிடும். இதில் எப்படி பொத்தான்
வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுக்கவும் அடுத்து கட்டத்திற்க்குள் உள்ள
கோடிங்-ஐ காப்பி செய்து நம் இணையதளத்திலோ அல்லது பிளாக்கிலோ
எங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
இதே போல் Follow on Buzz என்பதையும் சொடுக்கி படம் 3 ல்
காட்டப்பட்டது போல் நம் இணையதள முகவரியை கொடுத்து அங்கு
இருக்கும் கட்டத்திற்க்குள் உள்ளதை காப்பி செய்து நம் தளத்தில்
தேவையான இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

0 comments

ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.


உங்களுக்கு எழும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடை
அளிக்க இணையதள வாசிகள் பலபேர் உள்ளனர். நம் கேள்விகள்
மற்றும் பதிலை வீடியோ மூலம் கூட கேட்கலாம் எப்படி என்பதை
பற்றிய ஒரு சிறப்பு பதிவு.

படம் 1

படம் 2

தினமும் எத்தனை கேள்விகள் நம்மிடம் எழுகின்றன அத்தனை கேள்வி
களுக்கும் விடை தேடி எங்கும் அலையவேண்டாம் உடனடியாக எந்தத்
துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் கேட்கலாம். மாணவர்களுக்கு
எழும் கேள்விகள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எழும்
சந்தேகம் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். மற்ற
தளங்களை விட இந்தத் தளத்தில் நாம் கேள்விகளை வீடியோ மூலம்
கூட கேட்கலாம். பதில் வீடியோவாக நமக்கு கிடைப்பது உண்டு.
இணையதள முகவரி : http://plank.ly
இந்தத்தளத்திற்க்கு சென்று நாம் கேட்க விரும்பும் கேள்விகளை
படம்-1ல் காட்டியபடி எளிதாக நம் டிவிட்டர் முகவரி மூலம் கூட
கேட்கலாம். விடியோ மூலம் கேள்விகேட்க விரும்பும் நபர்கள்
தங்களுக்கென்று என்று ஒரு இலவச கணக்கை இந்தத்தளத்தில்
உருவாக்கிக்கொள்ளவும். எல்லாத்துறை நண்பர்களும் நிறைந்து
இருப்பதால் நாம் கேள்விகளை கேட்ட சில மணி நேரங்களில்
பதில் கிடைத்திவிடும். நாம் இந்த தளத்தில் வேறு யாரோ கேட்ட
கேள்விக்கு பதில் தெரிந்தால் கூட பதில் அளிக்கலாம். கண்டிப்பாக
இந்தத்தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

0 comments

இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே புதிய குரோமெ 5 பீட்டா பதிப்பு வெளிவந்திருக்கிறது அதை தரவிறக்க இங்கே செல்லுங்கள் புதிய பீட்டா பதிப்பில் தேவையில்லாத ப்ளக் இன்ஸ் (Plug ins) களை நிறுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதை செய்ய உங்களிடம் புதிய குரோம் 5 பீட்டா பதிப்பு நிறுவி இருக்க வேண்டு.

முதலில் உங்கள் குரோம் வலை உலாவியில் அட்ரஸ் பாரில் about:plugins என்று டைப் செய்து என்டர் தட்டவும்.



இப்பொழுது உங்கள் குரோம் பிரவுசரில் நிறுவி உள்ள அனைத்து பிளக் இன்களும் காட்டப்படும். அனைத்து பிளக் இன்களுக்கும் கீழே Disabled என்ற பட்டந் இருக்கும் அதை கிளிக் செய்வதுன் மூலம் நிறுத்தி வைக்கலாம். வேண்டும் என்கிற பொழுது இதே போல சென்று Enabled செய்து கொள்ளுங்கள்.


நிறைய நண்பர்கள் போட்டோஷாப் கற்றுக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது என்கிறார்கள். இதை நிறைய பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது எனவும் இதனால் போட்டோஷாப்பிற்கு பதில் வேறு ஏதும் மென்பொருள் இருக்கிறதா போட்டோஷாப் வேலைகள் அனைத்தும் செய்ய என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக ஒரு இலவச போட்டோஷாப் போன்ற ஒரு மென்பொருள் இதன் பெயர் ஜோனர் போட்டோ ஸ்டூடியோ.

இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடிய வேலைகள் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.


டேப் முறையில் படங்களை பார்க்கலாம்.

உங்கள் புகைப்படங்கள் எந்த ஒரு வன்பொருளிலிருந்தும் நேரடியாக இறக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமாரவில் இருந்து நேரடியாக இந்த மென்பொருள் மூலம் படங்களை இறக்கி எடிட் செய்யலாம்.

உங்கள் போட்டோவில் Exif மற்றும் Meta டேட்டாக்களை எடிட் செய்யலாம்.

கூகிள் எர்த்திற்கு GPS கோப்பாக Import மற்றும் Export செய்ய முடியும்.

தேடு பொறி மிகவும் புகைப்படங்களை வேகமாக தேடி தரும்.

White Balance மற்றும் Satuaration போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

ரெட் ஐ மற்றும் கிளோன் ஸ்டாம் உபயோகபடுத்த முடியும் இந்த மென்பொருளில்.


போட்டோ கோப்புகளை வேறு வகை கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் எடிட் செய்த போட்டோக்களை பிளிக்கர் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு நேரடியாக தரவேற்றலாம்.



விதவிதமான காலண்டரில் உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள் அலல்து உங்கள் குடும்ப புகைப்படங்களை இணைக்கலாம்.

பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களாக மாற்றலாம்.


இதனுடன் ஒரு உதவிக் கையேடும் உள்ளது.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி

இது விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா/7 (32Bit / 64 Bit) போன்றவற்றில் மட்டுமே இயங்கும். விண்டோஸ் 2000ல் இயங்காது.

குறைந்தபட்சம் 512எம்பி நினைவகம் வேண்டும்

ப்ரோஸஸர் 300 MHZ குறைந்தபட்சம் இருக்க வேண்டும்



0 comments

பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.


உலகில் அதிகமான மக்களை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும்
முதல் சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள்
தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

பேஸ்புக் சில மாதங்களுக்கு முன் தான் கணினி கொள்ளையர்கள்
தங்கள் கைவரிசையை காட்டினர் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்
இப்போது முன்பைவிட சற்று அதிகமாக தாக்கியுள்ளனர் அதாவது
நீச்சல் குளத்தில் குழந்தை ஒன்று குளிக்கும் ஆபாச விடியோவை
ஏற்றியுள்ளனர். பேஸ்புக்-ல் இந்த முகவரியை சொடுக்கிய அனைத்து
கணினியும் மால்வேர் -ஆல் பாதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்-ல் மால்வேர்
என்று பரவிய அடுத்த சில மணி நேரத்திற்க்குள் பிரச்சினையை
கண்டுபிடித்தும் அதை தீர்க்க முடியாமல் தினறியுள்ளனர். யார்
அனுப்பினார்கள் எங்கிருந்து அனுப்பினார்கள் என்ற எந்த தகவலும்
தெரியவில்லை சராசரியாக பல இலட்சம் மக்கள் கணினி இதனால்
பாதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் -ல் உடனடியாக பாதுக்காப்புக்கு என்று
பல வல்லுனர்களை நியமித்து இனி இதுபோல் பிரச்சினை வராமல்
தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எத்தனை
தொழில் நுட்ப வல்லுனர்களை வைத்தாலும் அவர்களால் இந்தப்
பிரச்சினைக்கு முடிவு எடுப்பது சற்று கடினம் தான் அதை விடுத்து
கணினி கொள்ளையர்களில் நல்லவர்கள் சிலபேரை வேலைக்கு
வைத்தாலே இந்தப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடும்.
வெறும் படிப்பறிவு உள்ளவர்களால இந்தப்பிரச்சினை தீர்ப்பது
சற்று கடினம் தான். பாம்பின் கால் பாம்பறியும். இதே போல்
முந்தைய பேஸ்புக் வைரஸைப்பற்றிய நம் பதிவைப்
பார்க்க இங்கே சொடுக்கவும்.

பேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

0 comments

இரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி உருவாகிறது


தொலைக்காட்சியிலே அனைத்து வசதிகளையும் கொண்டு வர
இருக்கும் கூகுளின் அடுத்தக்கட்ட முயற்ச்சியில் இண்டெல் மற்றும்
சோனி இணைந்து பல கூடுதல் வசதிகளைத் தர இருக்கிறது இதைப்
பற்றிய சிறப்பு பதிவு.

கூகுளின் அடுத்த தலைமுறைக்கான தொலைக்காட்சியில் கிடைக்கும்
சலுகைகளைப் பார்த்தால் ய்ர்ரும் டிஷ் பக்கம் போகமாட்டார்கள் என்றே
தோன்றுகிறது. வீட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்தால் போதும்
அதுவும் கூகுள் தொலைக்காட்சி என்றால் அதனால் கிடைக்கும் பலன்
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஒரே தொலைக்காட்சியில்
கம்ப்ப்யூட்டர் முதல் தொலைபேசி போன், டிஷ் மற்றும் இன்னும் பல
சலுகைகளை கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.
வெளிவரும் காலம் 2015 ஆம் ஆண்டு , சற்று அதிகமாக உள்ளது.
கூகுள் வழங்கும் சேவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிவரும்
நேரம் சரிதான். ஐபாட்டில் இருந்து ஐபேட் வரை அனைத்து
சலுகைளையும் கொடுக்கும் இதற்காக கூகுள் தற்போது ஒதுக்கி
இருக்கும் தொகை 1.9 பில்லியன் டாலர்.

0 comments

முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்


நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் 3G சேவையைக்
காட்டிலும் 10 மடங்கு அதிக வேகத்தில் இன்னும் ஒரு படி
தாண்டி 4G சேவை நமக்கு கிடைக்க இருக்கிறது இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.

3G -ன் சேவை நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும்
மொபைலில் முகம்பார்த்து பேச மட்டுமல்ல தகவல் பறிமாற்றத்திலும்
ஒரு முன்னனி இடத்தைப் பிடித்து இருக்கிறது.இந்நிலையில் தற்போது
இதன் அடுத்த தலைமுறைக்கான புரட்சியாக 4G சேவை
வெளிவந்துள்ளது. 3G சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகம்.
அமெரிக்காவில் HTC EVO என்ற நிறுவனம் சிறப்பு ஹார்டுவேர்
மற்றும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் ”சூப்பர் போன்ஸ் “ என்ற பெயரில்
4G சேவையை வரும் ஜுன் 4ம் தேதி முதல் வெளீயிடுகி. HTC
பயனாளர்கள் 3G -ல் கொடுத்த அனுபவத்தை கொண்டு தான் 4G -ன்
சேவை வர இருக்கிறது. மாதக் கட்டணமாக $29 டாலர் பணம் மட்டும்
கூடுதலாக செலுத்தினால் போதுமானது. விரைவில் அனைத்து
நாடுக்ளிலும் இதன் சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.


1 comments

இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்


புதிதாக ஒருவர் இணையதளம் உருவாக்க வருகிறார் என்றால்
அவரிடம் கேட்க வேண்டிய பொதுவான கேள்விகள் என்னென்ன
என்பதையும் எளிதாக அவருக்கு இமெயில் மூலம் இந்த தகவலை
சில நிமிடங்களில் தெரிவிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த பதிவு.

படம் 1

இணையதளம் ஆரம்பிக்க வரும் நபர்களிடம் கணினியில் நாம்
கேட்கும் தொழில்நுட்ப கேள்விகள் எப்படி எல்லாம் இருக்க
வேண்டும் தொழில்நுட்ப வழியாக இதெல்லாம் தேவை
அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திரையின் அளவு , எந்த ஆப்ரேட்டிங்
சிஸ்டம் துணை வேண்டும் என்பதையும் எந்தெந்த உலாவிகளில்
எல்லாம் பக்கத்தின் அளவு எப்படி இருக்கும் என்பதையும்
ஜாவாஸ்கிரிப்ட், பிளாஸ் துனையும் தேவையா இல்லையா
என்பதையும் எளிதாக தேர்ந்தெடுத்து கேட்க வரும் நபருக்கு
இமெயில் அனுப்ப ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://supportdetails.com

படம் 2

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி
நாம் பயன்படுத்தும் இணைய உலாவி எதெற்க்கெல்லாம் துனை
செய்கிறது என்பதையும் எளிதாக காணலாம் கூடவே யாருக்கு
இந்த தகவலை இமெயில் அனுப்ப வேண்டுமோ இதில் நம்
பெயரையும் இமெயில் முகவரியையும் கொடுத்து பெறுபவரின்
இமெயில் முகவரியையும் கொடுத்து send details என்ற
பொத்தானை அழுத்தி தகவலை எளிதாக அனுப்பலாம்.இந்த
தகவலை படம் 2-ல் காட்டியபடி எக்ஸெல் கோப்பாகவும் மற்றும்
pdf கோப்பாகவும் தரவிரக்கும் வசதியும் உள்ளது.

0 comments

Windows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு (Language Interface Pack - LIP)

விண்டோஸ் இயங்கு தளத்தில் மொழி இடைமுகத் தொகுப்பைப் பற்றி தெரியாதவர்க்காக இந்த பதிவு.

இந்த இடை முகத் தொகுப்பு, உங்கள் கணினியை தமிழிலேயே உபயோகிப்பதற்கு முதல் படி.


http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta


மேற்கண்ட சுட்டிக்கு சென்று அந்த தொகுப்பை உங்கள் விண்டோஸ் 7 கணினியில் நிறுவி விட்டு, தொடங்கினால், உங்கள் விண்டோஸ், உங்களை "நல்வரவு " என்று வரவேற்கிறது,

பிறகு பெரும்பான்மையான இடை முகங்கள் தமிழுக்கென மற்றப் பட்டுள்ளன,

உங்களுக்கு தமிழ் அவ்வளவாக வசதியா இல்லை என்றால் எப்போது வேண்டுமென்றாலும், கண்ட்ரோல் panel சென்று ஆங்கிலத்தை இடைமுகமாக ஆக்கிக் கொள்ளலாம்.

மேலும் MS ஆபீஸ் க்கு

http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=91426C33-EA45-482D-AF08-CD8EA8CBFD53&displaylang=ta

இதே போல் நிறைய மேன்தொகுப்புகளும் தமிழில் கிடைக்கின்றன.

உதாரணத்திற்கு, Firefox, Opera, Chrome போன்ற உலாவிகள்.

மேலும் பல வலை மென் தொகுப்புகளான (Web Application) Facebook, Meebo, Gmail, Blogger ஆகியவையும் தமிழில் கிடைக்கின்றன.

மேலும் உங்களுக்கு தெரிந்த தொகுப்புகளையும் கருத்துரையில் தெரிந்தால் கூறுங்கள்.


0 comments

மனிதனை மிஞ்சும் அதிநவீன ரோபோட் வீடியோ ஸ்பெஷல் ரிப்போர்ட்

நாளுக்கு நாள் மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும்
ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த
வகையில் இன்று மனிதனை மிஞ்சும் அதிநவீன ரோபோட்
பற்றிய சிறப்புப் பதிவு.

காலத்தின் வேகமான வளர்ச்சி இயந்திரமனிதன் பூமியில் கால்வைத்து
விட்டான் மனிதனைப்போலவே அனைத்து செயல்களும் எந்த
குழப்பமும் இல்லாமல் சென்னதை அப்படியே செய்கிறான். நாளுக்கு
நாள் வளர்ந்து வரும் இந்த ரோபோட் வளர்ச்சியில் தற்போது ஜப்பானில்
சிறப்பு ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன் பெயர் நேஒ
மற்ற ரோபோட்டில் இல்லாத சிறப்பு இதில் என்ன இருக்கிறது என்றால்
எந்த பக்கமும் சாய்வாக அதேசமயம் நுட்பமாக தன் உடலை எல்லா
பக்கமும் எல்லா கோணத்திலும் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்
பட்டுள்ளது. இதுவரை இந்த பிரச்சினை தான் பெரிதாக இருந்தது.
அதுமட்டுமல்ல தரையில் இருக்கும் பொருட்களை அழகாக குனிந்து
எடுத்து அதை குப்பைக்கூடையில் போடும் அரிய சோதனை
காட்சியையும் தத்ருபமாக காட்டியுள்ளனர். கீழே விழுந்தால்
எளிதாக எழுந்துவிட முடியாது என்ற நிலையையும் மாற்றி
உடனடியாக தன் கைகளை தரையில் வைத்து அழகாக எழுகிறது.
53 செ.மீ உயரமுள்ள இந்த ரோபோட் செய்யும் செயல்கள் அனைத்தும்
பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. 2011 ம் ஆண்டு இது விற்பனைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்பற்றிய ஒரு சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்

http://www.youtube.com/watch?v=rSKRgasUEko&feature=player_embedded


0 comments

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி


விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான
முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம்
அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

படம் 1

விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது
பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள்
பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல்
இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர்.
உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட்
இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

படம் 2

முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து
அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok
பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்.
இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும். கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல்
காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ
காப்பி செய்து அங்கு சேர்க்கவும்.
page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு
கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும். இப்போது
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.

0 comments

உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் மிகவும் பயனுள்ள இணையதளம்

உலகநாடுகள் அனைத்திலும் சுற்றுலா செல்ல வேண்டுமானால்
ஒவ்வொரு இணையதளமாக சென்று தேடவேண்டாம் ஒரே
தளத்தில் பல 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுலா தகவல்களை
கொண்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது இந்த விடுமுறையில் எந்த
சுற்றுலா தளத்திற்க்கு செல்லலாம் என்ற ஆவல் நமக்கு இருக்கும்
இதற்க்காக உலகநாடுகள் அனைத்திலும் நாம் எங்கு சுற்றுலா செல்ல
வேண்டுமானாலும் எளிதாக அதே சமயம் பயனுள்ள இடங்களை
எளிதாக கண்டுபிடித்து செல்லாம். கண்ணை கவரும் படங்களுடன்
எந்த நாட்டை நாம் தேர்ந்தெடுக்கிறோமோ அந்த நாட்டிற்க்கு
ஆகும் பயண செலவில் இருந்து அங்கு இருக்கும் கோவில்கள்
முதல் தங்கும் விடுதிகள் வரை அனைத்தையும் கொண்டுள்ளது.

இணையதள முகவரி : http://www.funtouristattractions.com

படம் 2

படம் 3

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் எந்த நாட்டிற்கு சுற்றுலா
செல்ல வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
தேர்ந்தெடுத்ததும் அந்த நாட்டின் முக்கியமான சுற்றுலா தலங்களை
படத்துடன் நமக்கு காட்டுகிறது. உதாரணமாக நாம் இந்தியாவில்
டெல்லி-ஐ தேர்ந்தெடுத்துள்ளம் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
இப்போது வலது பக்கம் எந்த தங்குமிடத்தில் இடம் காலியாக
உள்ளது என்பதையும் அத்ற்கு அடுத்து நாம் பயணம் செய்யும்
நாளில் விமானத்தில் இடம் இருக்கிறதா என்றும் எளிதாக அறியலாம்.
படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது. பூங்காவில் இருந்து மிருககாட்சி
சாலைவரை அனைத்துக்கும் காரில் செல்ல வழி (மேப் வசதி) கூட
கொடுத்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.


0 comments

கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்

நம் இணையதளத்திற்க்கு சில நேரங்களில் ஏதாவது வித்தியாசமான
பின்னோட்டம் வருவது உண்டு அப்போது அது என்ன மொழி என்று
தெரியாமல் கோழி கிறுக்கியது போல் இருப்பதால் அதை குப்பைக்கு
நகர்த்தி விடுவதும் உண்டு ஆனால் கூகுள் உதவியுடன் அதை நாம்
எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் அந்த மொழியை
எப்படி ஆங்கில மொழிக்கு எளிதாக மாற்றலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

சில இணையதளங்களில் முக்கியமான செய்தி வேற்று மொழிகளில்
வெளிவந்திருக்கும் ஆனால் அது என்ன மொழியில் இருக்கிறது
என்று தெரியவில்லையா உடனடியாக நாம் என்ன மொழி என்று
கண்டுபிடிக்க கூகுளில் ஒரு வசதி உள்ளது. கூகுளின் மற்றோரு
சேவையான கூகுள் மொழிமாற்றியில் நாம் எளிதாக எளிதாக
எந்த மொழியையும் கண்டுபிடிக்கலாம். கூடவே அந்த மொழியை
ஆங்கில மொழிக்கு மாற்றலாம். இதற்க்கு உதவும் கூகுளில்
இணையதள முகவரி : http://translate.google.com
இதில் நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் காப்பி செய்து
படம் 1 -ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்க்குள் கொடுத்து விட்டு
Enter பொத்தானை அழுத்தியதும் நாம் எந்த மொழியை
கொடுத்திருக்கிறோம் என்றும் அதை எந்த மொழிக்கு மாற்ற
வேண்டும் என்றும் காட்டும் தற்போது அனைத்து மொழிகளையும்
எளிதாக கண்டுபிடிக்கிறது ஆனால் மற்ற மொழியில் இருந்து
தமிழ் மொழிக்கு மாற்றுவது மட்டும் இப்போதைக்கு துனை
செய்யவில்லை. கண்டிப்பாக இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.


0 comments

3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 3D -ல் நமக்கு
பிடித்த பொம்மை வடிவங்களை எளிதாக எப்படி உருவாக்கலாம்
என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1

படம் 2

3D பற்றி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துத்
துறையைச்ச் சார்ந்தவர்களுக்கும் எளிதாக முப்பரிமானத்தில் ஒரு
படத்தையோ பொருளையோ ஆன்லைன் மூலம் எளிதாக
வடிவமைக்கலாம். எந்த மென்பொருளும் தேவையில்லை அதே போல்
புதிய கணக்கும் உருவாக்கத்தேவையில்லை சற்றே வியப்பாக
ஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

இணையதள முகவரி : http://www.papercritters.com/pc.php

இந்த இணையதளத்திற்க்கு சென்று Toy Creator என்ற பொத்தானை
அழுத்தி உருவாக்கலாம் இதற்க்கு படம் 1-ல் காட்டியபடி இடதுபக்கம்
இருக்கும் எந்த ஒரு வடிவத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு அந்த வடிவத்தை வைத்து நாம் 3D -ல் நமக்கு பிடித்த
வடிவத்தை உருவாக்கலாம் கூடவே எந்த கலர் வேண்டும் என்பதையும்
தப்பாக செய்துவிட்டால் அதை துடைக்க Clear மற்றும் Undo வசதியும்
உள்ளது. இதனுடன் நாம் விரும்பும் படத்தை கூட சேர்த்தும்
கொள்ளலாம். வடிவமைத்து முடிந்தவுடன் அதை நாம் Save என்ற
பொத்தானை அழுத்தி படம் 2 -ல் இருப்பது போல் சேமித்துக்கொள்ளலாம்

ஆன்லைன்-ல் நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்தும் கொள்ளலாம்.
ஏற்கனவே பலர் உருவாக்கிய 3D வடிவங்களைப்பாற்பதற்க்கு
” The colony ” என்ற பொத்தனை அழுத்திப் பார்க்கலாம். கண்டிப்பாக
இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

0 comments

கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்



கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும்.

இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம். அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும்.

ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.

இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது.

குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]'அல்லது'[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.

எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும்.

உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.
0 comments

கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்


கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும்.

இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம். அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும்.

ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.

இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது.

குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]'அல்லது'[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.

எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும்.

உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.
0 comments

பைல்களை அழிக்க முடியவில்லையா?

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.

அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள்.

சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்.
Related Posts with Thumbnails