பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்
பழுதான CD அல்லது DVD -ல் இருந்த முக்கியமான தகவல்களை
எப்படி மீட்கலாம் என்பதைப்பற்றிதான இந்தப்பதிவு.

படம் 1
சவுதியில் இருந்து தோழி மீனா பழுதாகியுள்ள DVD -யில் இருந்து
தகவல்களை எப்படி மீட்கலாம் என்பது பற்றி கேட்டிருந்தார்.
பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இங்குள்ள
தளமுகவரியை சொடுக்கி தரவிரக்கிக்கொள்ளலாம்.
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

படம் 2

படம் 3

படம் 4
இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
உங்கள் DVD டிரைவில் பழுதான DVD – ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் இருப்பதுபோல் வரும் அடுத்து Next என்ற
பொத்தனை அழுத்தியவுடன் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்
இதில் நாம் DVD-உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது படம் 3-ல் காட்டியபடி உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ தேந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி படம் 4 உள்ளவாறு வரும்.

0 comments:
Post a Comment