3D-ல் பிடித்த வடிவங்களை எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் 3D -ல் நமக்கு
பிடித்த பொம்மை வடிவங்களை எளிதாக எப்படி உருவாக்கலாம்
என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 2
3D பற்றி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துத்
துறையைச்ச் சார்ந்தவர்களுக்கும் எளிதாக முப்பரிமானத்தில் ஒரு
படத்தையோ பொருளையோ ஆன்லைன் மூலம் எளிதாக
வடிவமைக்கலாம். எந்த மென்பொருளும் தேவையில்லை அதே போல்
புதிய கணக்கும் உருவாக்கத்தேவையில்லை சற்றே வியப்பாக
ஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
இணையதள முகவரி : http://www.papercritters.com/pc.php
இந்த இணையதளத்திற்க்கு சென்று Toy Creator என்ற பொத்தானை
அழுத்தி உருவாக்கலாம் இதற்க்கு படம் 1-ல் காட்டியபடி இடதுபக்கம்
இருக்கும் எந்த ஒரு வடிவத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு அந்த வடிவத்தை வைத்து நாம் 3D -ல் நமக்கு பிடித்த
வடிவத்தை உருவாக்கலாம் கூடவே எந்த கலர் வேண்டும் என்பதையும்
தப்பாக செய்துவிட்டால் அதை துடைக்க Clear மற்றும் Undo வசதியும்
உள்ளது. இதனுடன் நாம் விரும்பும் படத்தை கூட சேர்த்தும்
கொள்ளலாம். வடிவமைத்து முடிந்தவுடன் அதை நாம் Save என்ற
பொத்தானை அழுத்தி படம் 2 -ல் இருப்பது போல் சேமித்துக்கொள்ளலாம்

ஆன்லைன்-ல் நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்தும் கொள்ளலாம்.
ஏற்கனவே பலர் உருவாக்கிய 3D வடிவங்களைப்பாற்பதற்க்கு
” The colony ” என்ற பொத்தனை அழுத்திப் பார்க்கலாம். கண்டிப்பாக
இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.


0 comments:
Post a Comment