இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை

மே 9, 2010

உலகஅளவில் இணையதளமுகவரி அனைத்தும் ஆங்கிலமொழி-ஐ
மையமாகக்கொண்டு தான் செயல்பட்டுவருகிறது சமீபத்தில் இனி
இணையதளங்களின் பெயர் அந்தந்த நாட்டின் மொழிகளில்
வரவிருக்கிறது என்ற செய்தி தெரிந்தது தான் இப்போது அதன்
தொடக்கமாக முதல் இணையதள முகவரியை இலத்தீன் மொழியில்
ஆரம்பித்துள்ளனர் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

இணைய உலகில் புதிய அத்தியாயம் தொடக்கம் என்று கூறினால்
தான் சரியாக இருக்கும் இண்டர்நெட்டில் இணையதளமுகவரிகளை
பதிவு செய்யும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)
புதிதாக இலத்தீன் மொழியில் அரேபி பெயரை இணையதள
முகவரியாக வைத்து சோதித்து வெற்றியும் பெற்றுள்ளது.
அவர்களுடைய மொழியில் இணையதளத்தின் பெயரை
நாம் இணைய உலாவியின் address bar- ல் கொடுத்தால் போதும்
அவர்களின் மொழியிலே யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சற்று விரிவாக பார்க்க வேண்டும் என்றால் இனி இணையதளங்களின்
முகவரி தமிழ் மொழியில் அதாவது தமிழ்நாடு.கொம் என்று
கொடுத்தால் போதும் ஆங்கில வார்த்தையை கொடுப்பதற்க்கு
பதில் தமிழ் வார்த்தையை முகவரியாக வைக்கலாம். இதன் சோதனை
முயற்ச்சியாகத்தான் இப்போது அரேபி மொழியில் வைத்துள்ளனர்.
அதன் முகவரி http://موقع.وزارة-الأتصالات.مصر/
இப்போதைக்கு இதில் ஒரு சிறிய குறை என்னவென்றால் இந்த தளத்தின்
பெயரை நாம் Mozilla Firefox 3.6.3 மற்றும் Google Chrome உலாவியில்
மட்டுமே பயன்படுத்த முடியும் இப்போதைக்கு இந்த பெயரை
IDN (International Domain Name) அங்கீகரித்துள்ளனர். விரைவில்
தமிழிலும் இணையதளப்பெயர்கள் வரும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails