கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்

நம் இணையதளத்திற்க்கு சில நேரங்களில் ஏதாவது வித்தியாசமான
பின்னோட்டம் வருவது உண்டு அப்போது அது என்ன மொழி என்று
தெரியாமல் கோழி கிறுக்கியது போல் இருப்பதால் அதை குப்பைக்கு
நகர்த்தி விடுவதும் உண்டு ஆனால் கூகுள் உதவியுடன் அதை நாம்
எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் அந்த மொழியை
எப்படி ஆங்கில மொழிக்கு எளிதாக மாற்றலாம் என்பதைப்
பற்றித்தான் இந்த பதிவு.

சில இணையதளங்களில் முக்கியமான செய்தி வேற்று மொழிகளில்
வெளிவந்திருக்கும் ஆனால் அது என்ன மொழியில் இருக்கிறது
என்று தெரியவில்லையா உடனடியாக நாம் என்ன மொழி என்று
கண்டுபிடிக்க கூகுளில் ஒரு வசதி உள்ளது. கூகுளின் மற்றோரு
சேவையான கூகுள் மொழிமாற்றியில் நாம் எளிதாக எளிதாக
எந்த மொழியையும் கண்டுபிடிக்கலாம். கூடவே அந்த மொழியை
ஆங்கில மொழிக்கு மாற்றலாம். இதற்க்கு உதவும் கூகுளில்
இணையதள முகவரி : http://translate.google.com
இதில் நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் காப்பி செய்து
படம் 1 -ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்க்குள் கொடுத்து விட்டு
Enter பொத்தானை அழுத்தியதும் நாம் எந்த மொழியை
கொடுத்திருக்கிறோம் என்றும் அதை எந்த மொழிக்கு மாற்ற
வேண்டும் என்றும் காட்டும் தற்போது அனைத்து மொழிகளையும்
எளிதாக கண்டுபிடிக்கிறது ஆனால் மற்ற மொழியில் இருந்து
தமிழ் மொழிக்கு மாற்றுவது மட்டும் இப்போதைக்கு துனை
செய்யவில்லை. கண்டிப்பாக இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails