ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.
உங்களுக்கு எழும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடை
அளிக்க இணையதள வாசிகள் பலபேர் உள்ளனர். நம் கேள்விகள்
மற்றும் பதிலை வீடியோ மூலம் கூட கேட்கலாம் எப்படி என்பதை
பற்றிய ஒரு சிறப்பு பதிவு.


படம் 1

படம் 2
தினமும் எத்தனை கேள்விகள் நம்மிடம் எழுகின்றன அத்தனை கேள்வி
களுக்கும் விடை தேடி எங்கும் அலையவேண்டாம் உடனடியாக எந்தத்
துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் கேட்கலாம். மாணவர்களுக்கு
எழும் கேள்விகள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எழும்
சந்தேகம் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். மற்ற
தளங்களை விட இந்தத் தளத்தில் நாம் கேள்விகளை வீடியோ மூலம்
கூட கேட்கலாம். பதில் வீடியோவாக நமக்கு கிடைப்பது உண்டு.
இணையதள முகவரி : http://plank.ly
இந்தத்தளத்திற்க்கு சென்று நாம் கேட்க விரும்பும் கேள்விகளை
படம்-1ல் காட்டியபடி எளிதாக நம் டிவிட்டர் முகவரி மூலம் கூட
கேட்கலாம். விடியோ மூலம் கேள்விகேட்க விரும்பும் நபர்கள்
தங்களுக்கென்று என்று ஒரு இலவச கணக்கை இந்தத்தளத்தில்
உருவாக்கிக்கொள்ளவும். எல்லாத்துறை நண்பர்களும் நிறைந்து
இருப்பதால் நாம் கேள்விகளை கேட்ட சில மணி நேரங்களில்
பதில் கிடைத்திவிடும். நாம் இந்த தளத்தில் வேறு யாரோ கேட்ட
கேள்விக்கு பதில் தெரிந்தால் கூட பதில் அளிக்கலாம். கண்டிப்பாக
இந்தத்தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

0 comments:
Post a Comment