உலகத்தின் எந்த மூலைக்கும் பேச 10 பைசா
ஒரு இருபத்தைந்தாண்டுகள் பின்னே கொஞ்சம் நினைவுகளைச்சுழற்றலாம்.
தொலைபேசிகள் எங்கள் ஊர் பக்கம் தலைவைக்காத காலம் அது.எங்கள் தொலைதொடர்பை பொருத்தவரை எங்கள் ஊர் மற்றும்சுற்றுவட்டார கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு போஸ்ட் ஆபிஸ்மட்டும் தான். அந்த நேரம் தபால் பெட்டிகளும் தபால்காரரும் தான்தகவல் பரிமாற்ற கருவிகள். சிவப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டபோஸ்ட் பெட்டிகள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும். அதிலேவெள்ளை எழுத்துக்களில் திறப்பு நேரம் நண்பகல் 11 மணி எனஆரம்பித்து அடுத்தடுத்த ஒவ்வொரு பெட்டிக்கும் 5 நிமிடங்கள்கூடிக்கொண்டே போகும். ஊரின் கடைசிப் பெட்டியில் மதியம் 1.30 எனஎழுதியிருக்கும். அத்தனை பெட்டிகளிலும் உள்ளதபால்களையெல்லாம் எங்க ஊரு தபால்காரர் பெரிய மூட்டையில்கட்டி தன் சைக்கிளில் வைத்து போஸ்ட் ஆபிஸ் நோக்கிஎடுத்துச்செல்வார்.

ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சேகரிக்கப்பட்ட தபால்கள்கொண்டுவரப்பட்டு மொத்தமாக கொட்டப்படும். பின்னர் ஊர்வாரியாக மாவட்ட வாரியாக தபால்கள் பிரிக்கப்பட்டு தனித்தனிசாக்குப்பைகளில் போட்டுக்கட்டி சீல் வைப்பார்கள். ஒவ்வொருதிசையிலும் செல்லும் பேரூந்துகளில் இந்த மூட்டைகள்ஏற்றிவிடப்படும். இவ்வாறாக நான் பெட்டியில் போட்ட கடிதம்அன்றைக்கு மாலை மாவட்ட தலைநகர் நோக்கி பயணப்படும்.அதேபோல அன்றைக்கு மாலை அந்த வழியாக வரும் தனியார்பேரூந்துகள் போஸ்ட் ஆபிஸ் அருகிலே நிறுத்தப்பட்டு எங்கள்ஊருக்கு வந்த மூட்டையை தூக்கி வீசுவார்கள்.அந்த மூட்டைகள்பிரிக்கப்பட்டு நாளைக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய தபால்கள்தனித்தனியாக பிரிக்கப்படும்.
நான் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு கடிதம் அனுப்பினால்எங்கள் ஊரில் இருந்து திருச்சி வரை பஸ்ஸில் பயணித்து, பின்னர்ரயிலில் ஏறி சென்னைக்கு செல்லும்.இவ்வாறாக நான் அனுப்பியகடிதம் ஒவ்வொரு ஊராய் சென்று சேர குறைந்தபட்சம் இரண்டுநாட்களும் அதிகபட்சம் ஒருவாரமும் (தமிழகம் மட்டும்) ஆகிவிடும்.சில நேரங்களில் ஒரு மாதம் கூட ஆகலாம். பல நேரங்களில் அதுவழிதவறிப் போய்விடும். ஆக ஒரு செய்தியைக் கேட்டு பதில் பெறஎனக்கு ஆகிய காலஅளவு குறைந்தபட்சம் 14 நாட்கள் அல்லது 1மாதம். இதெல்லாம் சாதாரண விசயங்களுக்கு சரி. ஒரு அவசரமாகஇருந்தால்? அதுதான் தந்தி சேவை. அந்தக் காலத்தில் தந்திஎன்றாலே அது யாராவது செத்துப்போனால் மட்டுமேபயன்படுத்துவது என்று தான் எல்லாரும் தெரிந்துவைத்திருந்தார்கள். நான் அப்போது நாலாம் வகுப்போ,ஐந்தாம்வகுப்போ படித்துக்கொண்டிருந்தேன். வெளியூரிலிருந்து எங்கள்பள்ளியில் பணிபுரிந்த எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருநாள் என்னைஅழைத்தார். என் மீது அவருக்கு நல்ல பிரியம் இருந்தது
" நிஜாம், இந்தா 5 ரூபாய். போஸ்ட் ஆபிசுக்குப் போய் ஒரு தந்திகொடுத்திட்டு வா"
நான் பதறியடித்துக் கேட்டேன்
"யார் சார் தவறிட்டது"
அவர் முகம் சட்டென மாறியது. கோபமா சிரிப்பா எனதெரியவில்லை.
"ஏன்டா தந்தின்னா சாவுக்கு மட்டும் தான் கொடுக்கனுமா? போடாபோயி போஸ்ட்மேனுக்கிட்ட 3 அப்டின்னு சொல்லு. 3 ரூபாய் 50 காசுவாங்குவார், இந்தா அட்ரெஸ்" என காசைக் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு போஸ்ட் ஆபிஸ் நோக்கி நடந்தேன். ஒரேகுழப்பம். அது என்னடா 3 ? அங்கே ஓரளவு கூட்டம் நின்றது.வரிசையில் நின்று போஸ்ட் மாஸ்டர் அருகில் சென்று 3 என்றுசொன்னேன். உடனே அவர் ஒரு பாரத்தை கொடுத்து இதை ஃபில்பண்ணு என்றார். நானும் அனுப்புனர், பெருனர் மட்டும் எழுதிஅவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி பொருளடக்கம் என்றஇடத்தில் 3 என எழுதி என்னிடம் மீதி சில்லரையைக் கொடுத்தார்.நான் அவரிடம்
"சார் 3 ன்னா என்ன?"
"3 ன்னா ஹேப்பி மேரீட் லைப்புன்னு அர்த்தம்"
"அதெப்படி 3 க்கு ஹேப்பி மேரீட் லைப் வரும்"
"அங்க பாரு"
அவர் காட்டிய இடத்தில் அங்கே ஒரு அட்டைகட்டித்தொங்கவிடப்பட்டிருந்தது. அதிலே
1. ஸ்டார்ட் இம்மிடியட்லி (Start Immediately)
2..3..4.. என 9 வரை உள்ள எண்களுக்கு ஒவ்வொரு வரிஎழுதியிருந்தது. நான் மீண்டும் அவரிடம்
"சார் 3 ன்னு எழுதுறதுக்கு பதிலா ஹேப்பி மேரீட் லைப்புன்னுமுழுசா எழுதினா என்ன?"
" அப்படி எழுதுனா ஒரு எழுத்துக்கு 50 பைசா" என்றார்.
ஓஹோ! இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா என ஒரு விசயத்தைதெரிந்துகொண்ட திருப்தியுடன் நடையைக் கட்டினேன்.
(ஹேப்பி மேரீட் லைப் 3ஆம் நம்பரா அல்லது 8ஆம் நம்பரா என்பதுசரியாக நினைவுயில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்)
இப்போது நான் கொடுத்த இந்த தந்தி எதிர்முனைக்கு எவ்வாறுபோகும்? முன்பு தந்தி மெசின் என்று ஒன்று இருந்ததாம். அதிலேஇந்த முனையில் இருப்பவர் நாம் கொடுத்த தகவல்களை வைத்துஅதிலே இருக்கும் ஒரு கம்பியைத் தட்டுவாராம். அது ஒரு சங்கேதமொழி என்றார்கள். அது எதிர்திசையில் இருப்பவருக்கும் புரிந்துஅதை பேப்பரில் எழுதி தபால்காரரிடம் கொடுத்து அவசரமாகபட்டுவாடா செய்வார்களாம். அதிலே சிலதுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு கல்யாண வாழ்த்துக்களுக்கு பதில் ஸ்டார்ட்இம்மிடியட்லியாகவும் போய்விடுமாம். அதைப்பார்த்து அவசரஅவசரமாக கிளம்பிவருபவர்களும் உண்டு. பின்னர் போஸ்ட்ஆபிஸ்கள் தோறும் தொலைபேசிகள் கொண்டுவரப்பட்டன.அப்போது தந்தி சேவை சற்று எளிமையாகப்பட்டது. சரியான தந்திதகவல்கள் சேர்க்கப்பட்டது. ஆனாலும் முகவரிகள் மாறிவிடும்.யாருக்கோ போக வேண்டிய சாவுத்தகவல் யாருக்கோ சென்று விடும்.இந்த தொலைதொடர்பு அலட்சியம் அன்றுமுதல் இன்று வரைபோஸ்ட் ஆபிஸ்களில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

தொலைபேசிகள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்த போதுதந்திகளின் சேவை குறைந்தது. குறைந்த பட்சம் ஒரு ஊரில் ஒருவீட்டிலாவது தொலைபேசி இருக்க அது ஊருக்கே சேவையானது. PPநம்பர் எனச் சொல்லுவார்கள். அப்போது போஸ்ட் ஆபிஸ்சேவையோடு டெலிபோன் எக்சேஞ்ச் சேவையும் துவக்கப்பட்டது.எங்கள் ஊரில் இருந்து மெட்ராசுக்கு பேச வேண்டுமானால் அதைடிரங்க் கால் என்பார்கள். எங்கள் ஊரில் இருந்து எங்கள் மாவட்டஎக்சேஞ்சுக்கு போன் செய்து மெட்ராஸ் நம்பரைச் சொல்லவேண்டும். அவர்கள் மெட்ராஸ் எக்சேஞ்சுக்கு போன் செய்து அந்தநம்பரைச் சொல்லுவார்கள். பின்னர் மெட்ராஸ் எக்சேஞ்சினர் அந்தநம்பரைப் பிடித்து வைத்துக் கொண்டு மாவட்டத்திற்கு லிங்க்கொடுப்பார்கள். மாவட்டம் எங்களைத் தொடர்பு கொண்டு பேசச்சொல்லுவார்கள். ஒரு 5 நிமிடம் டிரங்கால் பேச 100 முதல் 150 ரூபாய்வந்துவிடும். தொலைப்பேசிகள் வரத்து அதிகமாக அதிகமாக தபால்நிலையங்களுக்கு வேலையே இல்லாமல் போனது. தினமும் வந்துபெஞ்சி தேய்த்து காபி குடித்து தினமணி பேப்பர் படிப்பது மட்டுமேவேலையாகிப்போனது. 3 ரூபாய் ஸ்டாம்ப் வாங்க 5 ரூபாய்கொடுத்தால் (இப்போதும்) சில்லரை இருக்காது.

அப்போது தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது.எவன்டா கண்டுபுடிச்சான்என புலம்பவைக்கும் வகையில் குபீரென களத்தில் குதித்ததுசெல்போன்கள். இப்போது அமெரிக்காவையா, அண்டார்டிகாவையா,அமேசான் காடுகளையா எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள 5 நொடிகள் போதும். நம் மக்கள் ஒவ்வொருவக்கும் ஒரு நம்பர்உண்டு. ஒவ்வொருவரின் சட்டை பாக்கெட்டுகளும் செயற்கைக்கோளோடு கண்ணுக்குத் தெரியாத கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது.ஹாலில் டிவி பார்க்கும் கணவன் சமயக்கட்டில் இருக்கும்மனைவியை செல்லில் தொடர்பு கொண்டு காபி கேட்கிறான்.சிக்னலில் பிச்சையெடுப்பவர்களும் செல்போன்வைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் கோடீஸ்வரர்களும்,ஐ.டியிலும்பெரிய அலுவலகங்களிலும் வேலை செய்பவர்கள் மட்டுமேபயன்படுத்திய இந்த செல்போன் இப்போது விவசாயிகள், பூசாரிகள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,மீனவர்கள், டிரைவர்கள், கூலிவேலைசெய்பவர்கள் என அனைவருக்குமே செல்போன் இப்போதுஇன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
இந்த செல்போன்களின் அபரிமித வளர்ச்சி போஸ்ட் ஆபிஸ்களைஇன்னமும் திவாலாக்கியது.பளீர் என சிவப்பாய் மின்னிய தபால்பெட்டிகளை இப்போது எங்கு தேடிலும் கானோம்.இங்கே கொடுக்கும்SMS அடுத்த நொடியில் எதிரிலே டெலிவரியாகி விடுகிறது. அந்தஅளவிற்கு வேகமும் துல்லியமும். ஆனால் இப்போது ஒருவெளிநாட்டு கால் பேச ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 20 ரூபாய் வரைசார்ஜ் செய்யப்படுகிறது. இதோ இப்போது உலகம் சந்திக்ககாத்திருக்கும் அடுத்த மாற்றம் VOIP (Voice over Internet Protocol).இப்போது சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மேட்டர்விரைவிலே சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். அப்படிஅறிவிக்கப்பட்டு அது புழக்கத்தில் வந்தால் நம் வீட்டு கம்ப்யூட்டர்வழியாக உலகத்தின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளகுறைந்தபட்சம் 10 பைசா தான் செலவு வரும். இதுசட்டப்பூர்வமாக்கப்பட்டால் நம்ம ஊரு தொலைதொடர்பு துறைமட்டுமல்ல, உலகத்தின் தொலைதொடர்பு வருமானம்அம்பேலாகிவிடும். இந்த VOIP ஐ சோதிக்கும் முகமாகஅமெரிக்க,ஐரோப்பிய நாடுகள் தனி செயற்கை செலுத்த பரிசீலனைசெய்து கொண்டிருக்கிறது. சென்போன் வந்து லேண்ட்லைனுக்குமூடுவிழா நடத்தியது. VOIP வந்து விட்டால் போதும் செல்போனுக்குமட்டுமல்ல உலக தொலைதொடர்பு துறையின் வருமானத்திற்கும்சேர்த்து மூடுவிழா நடத்திவிடும்.
மனிதன் இவ்வளவு அறிவு சாதனங்களையும் தன் சட்டைபாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஆன்மீகம் என்று வரும்போதுமட்டும் அறிவைப் பயன்படுத்துவதை மறந்துவிடுகிறான். இந்ததொலைதொடப்பு மாற்றங்கள் போலவே கடவுளைத்தொடர்புகொள்ள வழிகாட்டும் போலித்தரகர்களும் நாளுக்கு நாள்அதிகமாகிக் கொண்டே செல்வதை கண்கூடாகக் காணமுடிகிறது.ஒரு SMS எவ்வாறு எதிர்முனையில் டெலிவரி ஆகிறது எனசிந்திக்கும் மனிதன், தன் போன்ற ஒரு மனிதன் தன்னை கடவுள்என்று சொன்னால் அதை துளியும் சிந்திக்காமல் அவனை கும்பிடஆரம்பிக்கிறான். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே எந்த ஒருதடையும் இல்லை. கடவுளைத் தொடர்புகொள்வதற்கு தன் மனம்என்ற சாதனம் தவிர வேறு எதுவுமே தேவையில்லை எனநினைத்தால் போதும் போலிகள் தானே ஒழிந்துவிடுவார்கள்.
0 comments:
Post a Comment