ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை எளிதாக கையாளுவதற்கு

உங்கள் கணினியில் விண்டோஸ் xp , உபுண்டு, விண்டோஸ் 7 என ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை வைத்து உள்ளீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். 

வழக்கமாக ஒரு இயங்குதளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, உதாரணமாக விண்டோஸ் 7 -இல் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, உபுண்டுவிற்கு செல்ல வேண்டுமெனில், கணினியை ரீ ஸ்டார்ட் செய்து, பூட் மெனு வரும்வரை காத்திருந்து பிறகு பூட் மெனுவில் உபுண்டுவை தேர்வு செய்வதுதான் நாம் அன்றாடம் செய்வது.


கணினி ரீ ஸ்டார்ட் ஆகி பூட் மெனுவும் திறந்து அதுவாகவே உபுண்டுவ்ற்கு சென்றால் எப்படி இருக்கும். அந்த நேரத்தில் தலைப்பு செய்திகள் பார்க்கலாம், காலியான காப்பி கோப்பையை எடுத்து வைத்து விட்டு வரலாம். இப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெறுமனே கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டியதில்லை.
இந்த பணியை  செய்ய iReboot எனும் சிறிய இலவச மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 



இந்த iReboot கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இது உங்கள் கணினியில் உள்ள இயங்குதளங்களை தானாகவே கண்டறிந்து விண்டோஸ் டாஸ்க்பாரில்  அமர்ந்து கொள்ளும்.

இதை உங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் இயங்குதளங்களில் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ரீ ஸ்டார்ட் ஆன பிறகு எந்த இயங்கு தளத்தில் பூட் ஆக வேண்டும் என்று இதில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மென் பொருள் விண்டோஸ் பத்திப்பு களுக்கானது, எனவே உபுண்டு போன்ற லினக்ஸ் தளங்களில் பதிய முடியாது. ஆனால் லினக்ஸ் இல் ரீ பூட் செய்யும் பொழுது வழக்கமான பூட் மெனு வரும், அதில் நமக்கு தேவையான OS ஐ தேர்வு செய்து கொள்ள இயலும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails