அனிமேட்டட் மின்புத்தகம் இலவசமாக உருவாக்க



நாம் நமக்குத் தேவையான பல விவரங்கள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை PDF வடிவில் கணினியில் பதிந்து வைத்திருப்போம். தேவைப் படும் பொழுது PDF Reader ஐக் கொண்டு திறந்து படித்துக் கொள்வது வழக்கம். ஆனால் PDF Reader -இல் படித்து போரடித்துக் போகாதா? 


சற்று வித்தியாசமாக PDF கோப்புகளை மின் புத்தகங்களாக மாற்றி வைத்துக் கொண்டால், ஒவ்வொரு முறை திறந்து படிக்கையிலும், நிஜ புத்தகத்தை படிப்பது போன்ற ஒரு உணர்வு வரும்பொழுது நமக்கே ஓர் உற்சாகம் வருமே..      

நம்மிடம் உள்ள PDF கோப்புகளை ஆன்லைனில் மின் புத்தகமாக (Flash Page Flip) மாற்றி தருவதற்கு PDF to Flash Page Flip என்ற வசதியை CodeBox என்ற தளம் 10 MB வரை அளிக்கிறது. 


இந்த தளத்தில் உள்ள Attach file லிங்கை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான PDF கோப்பை அப்லோடு செய்யுங்கள். (நான் இங்கு எனக்கு பிடித்த பதிவர் பாலா சாரின்ஒரு இடுகையையும், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு முதல் பாகத்தையும் சோதித்துப் பார்த்தேன்) 

   
அப்லோடு செய்த பிறகு, பக்க அளவுகள், ஜூம் மற்றும் பக்க எண்ணிக்கை ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். PDF கோப்பிலுள்ள அனைத்துப் பக்கங்களையும் மாற்ற வேணுமெனில் Number of pages கொடுக்க வேண்டியதில்லை.

  
மின் புத்தகம் உருவாக்கப்பட்டு Download your file என்ற லிங்க் வரும் பொழுது அதை க்ளிக் செய்து ZIP கோப்பை தரவிறக்கி UNZIP செய்து அதிலுள்ள  index.html என்ற கோப்பை இயக்கினால் போதும்.


இதோ அழகான மின்புத்தகம் தயார். 




0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails