நம்மில் பலர், இணையத்தில் உலாவுவதற்கு IE, Firefox, Chrome, Opera, Safari போன்ற உலாவிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை தங்களது கணினியில் வைத்திருப்பது வழக்கம்.
இது பல சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை மறுக்க இயலாது. உதாரணமாக, சில Secured தளங்கள் IE browser -இல் மட்டுமே சிறப்பாக செயல்ப்படும்படியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. உங்கள் கணினியில் Default browser ஆக Firefox அல்லது Chrome இருக்கும் பட்சத்தில் உடனே இது போன்ற தளங்களை IE யில் திறப்பது கொஞ்சம் சமயமெடுக்கும்.
அத்தோடு, இது போன்ற தளங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் லிங்க் வழியாகவோ அல்லது மற்ற வலைப்பக்கங்களில் லிங்க்காகவோ வருகின்ற பட்சத்தில், உடனடியாக இவற்றை Default browser அல்லாத பிற உலாவிகளில் திறப்பதற்கு சற்றே சிரமமாக உள்ளது.
இந்த சிக்கலுக்கு தீர்வாக Browser Chooser எனும் சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் அமைகிறது.
இந்த மென்பொருள் கருவியை பயன் படுத்துவதன் மூலமாக, முன்பைவிட இனி எளிதாகவும், விரைவாகவும் இணையத்தில் உலாவ முடியும் என்பதில் ஐயமில்லை.



0 comments:
Post a Comment