0 comments

பழைய அட்டையில் லேப்டாப் கணினி உருவாக்கும் புதிய அதிசயம்

பழைய அட்டைகளை தூக்கி எறியாமல் அதைக்கொண்டு புதிதாக
லேப்டாப் கணி ஒன்றை உருவாக்கியுள்ளனர் இதைப்பற்றி தான்
இந்த பதிவு.
தொழில் நுட்பத்தில் தினமும் நடக்கும் மாற்றம் நம்மை வியப்பின்
உச்சிக்கே கொண்டு செல்கிறது என்றால் மிகையாகாது அந்த வகையில்
இப்போது பழைய கடையில் போடும் அட்டைகளை கொண்டு அழகான
எங்கும் எளிதாக தூக்கி செல்லும் லேப்டாப்பை (மடிக்கணினி)-யை
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.என்னதான் நடக்கிறது. எடை மிக
மிக குறைவு. எங்கும் கோப்பு கொண்டு செல்வது போல் கொண்டு
செல்லலாம். கையால் அட்டையில் உள்ள கீபோர்டில் தொட்டாலே
போதும் இன்புட் அதன் வழியாக எடுத்துக்கொள்கிறது. இந்த
மடிக்கணினியின் திரை நீலத்திரை (Blue Screen) கொண்டு
உருவாகப்ப்பட்டுள்ளது இதிலும் நாம் மற்ற லேப்டாப்களில்
என்னவெல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் செய்யலாம்.
ஆனால் DVD Drive நாம் External USB மூலம் வெளியில் மாட்டி
பயன்படுத்தாலம்.இதன் விலை இன்னும் நிர்யணம் செய்யப்பட
வில்லை. இது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை பற்றிய
படத்தை இத்துடன் இணைத்துள்ளோம்
0 comments

புகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக பெரிதாக்க


நம்மிடம் உள்ள புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வழக்கமாக நாம் பெரிதாக்க முயற்சி செய்கையில், அதனுடைய resolution பாதிக்கப்படுவது இயல்பு. சில சமயங்களில் நமது மொபைல் போன்களில் எடுக்கும் படங்களை பெரிதாக்கி பிரிண்ட் செய்யும் பொழுது படங்கள் தெளிவில்லாமல் இருப்பதை கவனிக்கலாம். 

நமக்கு தேவையான அளவில் படங்களை பெரிதாக்க ஒரு இலவச மென்பொருள் SmillaEnlarger (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த மென் பொருள் கருவிக்கு installation தேவையில்லை. தரவிறக்கி unzip செய்தபிறகு SmillaEnlarger ஃபோல்டருக்குள் உள்ள SmillaEnlarger.exe என்ற கோப்பை இயக்கினால் போதுமானது. 

கீழே உள்ள படத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியை இந்த கருவியை பயன் படுத்தி எப்படி பெரிதாக்குவது என்று பார்ப்போம்.

 
 SmillaEnlarger -இல் இந்த கோப்பை திறந்த பிறகு, இடது புறமுள்ள Output Dimensions பகுதிக்கு சென்று தேவையான அளவு - மாற்றங்களை தேர்வு செய்து கொள்ளலாம். 


இப்பொழுது cropping பேனில் படத்தில் ஒரு சிறிய பகுதியை தேர்வு செய்தவுடன்,

 
Thumbnail preview -இல் அந்த சிறிய பகுதி பெரிதாக, நாம் கொடுத்துள்ள அளவிற்கு தெளிவாக தெரிவதை கவனிக்கலாம். 
Enlarger Parameters பகுதியில் sharp, paint போன்ற வசதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். 


இதில் பல புகைப்படங்களை ஒரே  சமயத்தில் கையாளும் வசதியும் உள்ளது. 

 

0 comments

SMS Blocker இந்தியரின் அபார திறமைக்கு சிறு சான்று


ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 425க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 
 
நண்பர்களே நமது கைத்தொலைபேசியில் தேவையில்லாத எஸ் எம் எஸ் வந்து நம்மை நிறைய தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும்.  இணைய மின்னஞ்சலில் வரும் சில ஸ்பெம் மின்னஞ்சலை போல உங்கள் தொலைபேசி எண் இத்தனை லட்சங்கள் வென்றிருக்கிறது போன்ற செய்திகள் வரும் இதே போல் உங்களுக்கு காலர் ட்யூன் வேண்டுமா. இந்த ஆபர் வேண்டுமா இந்த பாடலை ஆக்டிவேட் செய்யுங்கள் என்பது போன்ற தேவையில்லாத SMSகள் வரும் இது போன்ற செய்தி SMS களை நிறுத்த இந்தியர் ஒருவர் ஒரு மென்பொருள் கண்டுபித்திருக்கிறார்.  இந்த மென்பொருள் நம்மில் பலருக்கும் ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். 

தேவையில்லாத Spam SMS களை தானாக தடை செய்யும்.

தடை செய்த SMSல் நமக்கு தேவையான SMS இருந்தால் அதை திரும்ப பெறும் வசதி. (இந்த சேவை வேறு எந்த மொபைல் மென்பொருளிலும் இல்லை)


இதன் விலை 2$ கள் இந்திய மதிப்பில் 99 ரூபாய் மட்டுமே/ - புதிய கண்டுபிடிப்பு என்பதால் இந்த மாத இறுதி வரை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

இந்த சுட்டியில் உங்கள் மொபைலுக்கான IMEI எண் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

உங்கள் மொபைல் மாடல் மற்றும் நிறுவனம்.  உங்கள் மொபைல் எண் போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.

இதில் நிறைய வசதிகள் உண்டு அதுகுறித்து அறிய இங்கே செல்லவும்.  சுட்டி

 


Read more: http://www.gouthaminfotech.com/2010/06/sms-blocker.html#ixzz0sOQwmTmk
Under Creative Commons License: Attribution
0 comments

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்



இதனை செய்வதற்கு நமக்கு LockImage என்ற software தேவைப்படும். இந்த software ஆனது சரியான password ஐ கொடுக்காமல் திறக்கவோ பார்க்கவோ விடமாட்டாது.

LockImage என்பது freeware எனப்படும் இலவச software வகையைச்சேர்ந்தது.

ஒரு படத்தை lock பண்ணுவதற்கு தேவையான படத்தை இந்த software இனூடாக திறக்கவேண்டும். அதன்பின் Save As என்பதனூடாக Save சேய்யவெண்டும்.


name ஐயும் type ஐயும் கொடுத்த பின் password கொடுக்கமுடியும்.

அவ்வளவுதான்.
இதை திறப்பதற்கு software தேவையில்லை. வெறுமனே password ஐ கொடுத்தால் போதும்.



குறிப்பு - இம்முறை மூலம் lock பண்ணிய படங்களை மீண்டும் சாதாரணமாக திறக்கப்படும் படமாக மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்க.

இங்கே Lockimage softwareவை டவுன்லோட் செய்க
Download LockImage

0 comments

வெற்று போல்டர்களை நீக்க

நமது கணிணியில் சில நேரங்களில் எந்த கோப்புகளும் இல்லாத வெற்று போல்டர்கள் உருவாகிவிடுவதுண்டு.இவற்றை ஒவ்வொன்றாக தேடி அளிப்பது கடினம்.இதற்கு உதவும் மென்பொருளை பற்றி பார்ப்போம்.

vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.



உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .


நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.
0 comments
கணனியில் மீள்நிறுவல் புள்ளி என்றால் என்ன? அதனை எவ்வாறு உருவாக்குவது? கணனியை எப்படி மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி மீள் நிறுவுவது? என்பவற்றை பார்ப்போம்.

முதலில் மீள் நிறுவல் புள்ளி என்பது எமது கணனியை தற்போது நாம் மீள்நிறுவு புள்ளி உருவாக்கும் போது கணனி எவ்வாறு உள்ளதோ அதே நிலைக்கு பின்னொரு நாளில் கணனியை கொண்டு வருவதற்கு உதவும் ஒரு செயற்பாட்டு புள்ளியாகும் . உதாரணமாக நாம் எமது கணனியில் புதிய முயற்சிகளை, தெரியாத சில புதிய மென்பொருட்களை நிறுவுதல், வைரசு தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது கணனியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க இந்த மீள் நிறுவல் புள்ளிகள் உதவுகின்றன.

இனி மீள்நிறுவல் புள்ளியை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் கணனியில் My Computer ல் வலது சொடுக்கி தோன்றும் சாளரத்தில் Properties ற்கு செல்லவும்.
அங்கே System protection என்பதை சொடுக்கவும்.
படம்2


தோன்றும் சாளரத்தில் Protection Setting எனும் பகுதியில் உங்கள் கணனியில் இயங்குதளம் நிறுவி உள்ள கணனி வன்தட்டு பிரிப்பை தெரிவு செய்யவும்(வழமையாக C:\ என்ற வன்தட்டு பிரிப்பில் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் ) தெரிவு செய்த பின் Create பொத்தானை சுட்டி தோன்றும் சாளரத்தில் எமது மீள்நிறுவல் புள்ளிக்காக ஒரு பெயரை வழங்கி Create பொத்தானை சொடுக்கவும். (நான் kanittamil என்று கொடுத்துள்ளேன்)
படம் 3


படம் 4
சிறிது நேரத்தின் பின் மீள் நிறுவற்புள்ளி உருவாக்க செயற்பாடு முடிந்து, முடிந்ததற்கான செய்தி திரையில் தோன்றும். இப்போது உங்கள் மீள் நிறுவல் புள்ளி வெற்றிகரமாக நிறுவி முடிந்தது.
படம் 5

இனி இம் மீள்நிறுவற் புள்ளியை பயன்படுத்தி எவ்வாறு கணனியை மீள் நிறுவுவதுஎன்று பார்ப்போம்.
முன்னர் செய்தது போலவே My Computer ஐ வலது சொடுக்கி Properties ற்கு செல்லவும்.படம் 1
அங்கே System protection என்பதை சொடுக்கவும். படம் 2
தோன்றும் சாளரத்தில் படம் 3 System Restore என்பதை சொடுக்கி தோன்று சாளரத்தில் Choose a different restore point என்பதை தெரிவு செய்து Next கொடுக்கவும்.
படம் 6
பின் தோன்றும் திரையில் நாம் உருவாக்கி வைத்துள்ள மீள் நிறுவல் புள்ளிகளில் ஒன்றை தெரிவு செயது Next கொடுத்து Finish கொடுக்கவும்.
படம் 7

இப்பொழுது உங்கள் கணனி , கணனியை மீள ஆரம்பிக்க கேட்கும். அனுமதி வழங்கினால் கணனி மீள ஆரம்பித்து நாம் வழங்கிய மீள் நிறுவுபுள்ளியில் கணனி எவ்வாறு இருந்ததோ அதே நிலைமைக்கு கணனியை மீட்டெடுத்து தரும்.

0 comments

மைக்ரோசாப்ட் இணையவெளியில் தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஆபீஸ் தொகுப்பினை, அதிகாரபூர்வமாக சென்ற வாரம் வெளியிட்டுள்ளது. கூகுள் மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் இந்த வகையில் வெகு காலமாக முன்னேறி வருவதால், தான் பின் தங்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மிக வேகமாக, ஆபீஸ் தொகுப்பு இணையத்தில், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.

வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் ஆகிய தொகுப்புகள் பயன்பாட்டிற்குக்கிடைக்கின்ற. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யாவரும் இதனை அணுகிப் பயன்படுத்தலாம். இந்த இணைய தொகுப்பு பிரிட்டன், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டாலும், மற்ற நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் இது கிடைக்கிறது.

இந்த தொகுப்புகளைப் பயன்படுத்த அனுமதி பெறுவதுடன், 25 ஜிபி ஆன்லைன் ஸ்பேஸ் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது. ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு இணையான ஒரு சாதனம் இது என்றும், கம்ப்யூட்டர், போன் மற்றும் பிரவுசர் வழியாக யாரும் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆபீஸ் தொகுப்புகளில் ஒன்றில் உருவாக்கப்பட்ட பைல்கள் எதனையும், இந்த இணைய தொகுப்பிலும் எடிட் செய்து சேவ் செய்து பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர்களிலும் பதிந்து வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய பைல் பழைய ஆபீஸ் பதிப்புகளில் உருவாக்கப் பட்டிருந்தாலும், அந்த பதிப்புக்கான எடிட்டிங் வசதியை, இந்த ஆன்லைன் ஆபீஸ் தொகுப்பு தருகிறது. இணையத்தில் இவ்வாறு செயல்படுவதால், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர், டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றை எடிட் செய்திடலாம்.

இதன் யூசர் இன்டர்பேஸ் மிகவும் எளிமையாகவும், நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் செயல்படுவது போல அனுபவத்தினைத் தருவதாகவும் உள்ளது. இந்த இணைய ஆபீஸ் தொகுப்பு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் மட்டும் இயங்கும் என எண்ண வேண்டாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களிலும் மிக நன்றாக இது இயங்குகிறது. ஆனால் ஒரே ஒரு குறை. ஆபீஸ் புரோகிராமில் எடிட் பட்டன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே செயல்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில், இந்த இணைய தொகுப்பும் இருக்கின்றது.

இனி, என் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. இணையத் தொடர்பு மட்டும் இருந்தால் போதும். இணைய வெளியிலேயே, ஆபீஸ் தொகுப்பினைப் பெற்று இயக்கலாம். பைல்களை உருவாக்கலாம். மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்து சீர் படுத்தலாம்.

முதலில் உங்களுக்கு விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இல்லையேல் உடனே உருவாக்கிக் கொண்டு பின் இதற்குச் செல்லவும்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
0 comments
Windows XP இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்வதற்கான அமைப்பு முறையை முன்னைய ஒரு பதிவில் பார்த்தோம். இது Windows Vista இயங்குதளத்தை உபயோகிப்பவர்களுக்கான தமிழ் ஒருங்குறி அமைப்பு(Tamil Unicode Setting) முறையாகும். உங்கள் கணனியின் Control Panel க்கு செல்லவும், அங்கு சென்றால் Regional and Language Options எனும் பகுதி காணப்படும்.
(Contral panel இன் தோற்றம்)
அதில் இரட்டைசொடுக்கு செய்ய தோன்றும் புதிய சாளரத்தில் Keyboards and Languages
என்பதை தெரிவு செய்யவும்.


பின் Change keyboards... என்பதில் சொடுக்கவும்,

அதன்போது தோன்றும் புதிய சாளரத்தில் Add... என்பதை சொடுக்கவும். தோன்றும் Add Input Languages எனும் புதிய சாளரத்தில் Tamil(India) keyboard tamil என தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி சாளரத்தை மூடவும்.
பின் Text Services and Input languages எனும் மற்றய சாளரத்தை Apply பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்தி அச் சாளரத்தையும் மூடவும்.

.
இப்போது உங்கள்கணனியில் ஒருங்குறி முறையில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும்.
உங்கள் கணனித்திரையின் அடிச்சட்டத்தில் EN என்று காணப்படும். அதில் சொடுக்கினால் படத்தில் காட்டப்பட்டவாறு தமிழ்,ஆங்கிலம் என இருமொழித் தெரிவினை காட்டும்.அதில் தமிழ் என்பதை தெரிவு செய்தபின்னர் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
தட்டச்சு முறை
D=அ
E=ஆ
F=இ
R=ஈ
G=உ
T=ஊ
Z=எ
S=ஏ
W=ஐ
~=ஒ
A=ஓ
Q=ஔ
k=க
U=ங
;=ச
]=ஞ
'=ட
C=ண
l=த
v=ந
h=ப
c=ம
/=ய
j=ர
n=ல
N=ள
J=ற
b=வ
B=ழ
V=ன
k+d=க்
k=க
k+e=கா
k+f=கி
k+r=கீ
k+g=கு
k+t=கூ
k+z=கெ
k+s=கே
k+w=கை
k+`=கொ("`"இந்த" ~ "விசையாகும்-!குறிக்கு முன்னால் உள்ளது)
k+a=கோ
k+q=கௌ
Related Posts with Thumbnails