பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.


அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அறிவை மேலும் வளர்க்கும்
விதம் பள்ளி பாடம் முதல் தேர்வுபாடம் வரை விபரமாகவும்
விரிவாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றிதான் இந்த பதிவு.

பள்ளி குழந்தைகளுக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நுழைவுத்தேர்வுக்கு
தயாராகும் அனைவருக்கும் உதவுவதற்க்காக ஒரு இணையதளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.sparknotes.com

படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் குழந்தைகள் தங்கள்
அறிவை மட்டுமல்ல திறமையையும் , தேர்வுக்கு எப்படி
தயார்ஆக வேண்டும் என்பதில் இருந்து எப்படி ஒவ்வொரு
பாடங்களையும் எளிதாக எப்படி படிக்கலாம். போட்டி தேர்வுக்கு
எப்படி செல்லவேண்டும் என்பது வரை அத்தனையும் இந்த
ஒரே தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். GRE பரீட்சை
எழுத செல்வதற்க்கு முன் இங்கு இருக்கும் மாடல் தேர்வு
எழுதி பார்க்கலாம்.ஆங்கில இலக்கணத்தில் சந்தேகமா ,
கணிதத்தில் சந்தேகமா அனைத்துக்கும் தீர்வு இனி இந்த
ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கும்.இன்னும் பலவிதமான
சேவைகளை இலவசமாக வழங்குகிறது. இந்த தளத்தில் நீங்கள்
உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கிக்கொண்டு
தொடங்கலாம்
.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails