மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்


மாடுகளை மகிழ்வித்து அதனிடம் இருந்த அதிக அளவு பாலைப்
பெறுவதற்க்காக புதிதாக LED ஒன்று வந்துள்ளது இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.

மாடுகளை அடர்ந்த புல் வெளி நிறைந்த காட்டுக்குள் கொண்டு சென்று
மேயவிட்டால் தான் அதை மகிழ்விக்க முடியும் என்பதெல்லாம் இனி
தேவையில்லை சாதாரனமாக நாம் ஒரே இடத்தில் கட்டிப்போட்டுக்
கொண்டே அதன் மனதை மகிழ்ச்சியாக மாற்றி அதனிடம் இருந்து
அதிக அளவு பாலை பெறமுடியும் என்பதை ரஷ்ய விஞ்ஞானிகள்
நிரூபித்துள்ளனர்.

மாடுகளை அடைத்திருக்கும் தொழுவத்தில் புதிதாக LED டிவி
ஒன்றை சரியான கோண்த்தில் வைத்து அதை மாடு பார்க்கும்
வண்ணம் வடிவமைத்துள்ளனர். அந்த LED டிவியில் எப்போதும்
பச்சை பசேல் என்று வளர்ந்திருக்கும் புல்வெளிகளை காட்டுகின்றனர்
மாடுகளும் அதைப் பார்த்துக்கொண்டே அங்கு இருக்கும் உணவை
சாப்பிடுகிறது. மாடுகள் எங்கும் கொண்டு செல்லாமல் இருக்கும்
இடத்திலிருந்தே புல் வெளிக்கு சென்றது போல் ஒரு உணர்வு
ஏற்படுவதால் அதிக அளவு பால் கொடுக்கிறது. இந்த LED டிவியில்
தொடர்ச்சியாக எப்போதும் புல்வெளி நிறைந்த காட்சிகள் வந்து
கொண்டே இருக்கும். ஒரு மாட்டு தொழுவத்திற்கு மொத்தமாக
இவர்களே வந்து LED டிவியை சரியான கோனத்தில் அமைத்து
கொடுக்கின்றனர். இதைப் பற்றிய சிறப்பு படங்களையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails