மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்

ரெஸ்யும் ஒரு மாதங்களில் பழசாகிவிடுகிறது ஏனென்றால் அடிக்கடி
வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி நம் ரெஸ்யும்
பயோடேட்டாவை மாற்றி அமைப்பதில்லை இதற்க்காக நம் விருப்பப்படி
பயோடேட்டா உருவாக்க விரும்பும் அனைவருக்கும்உதவக்கூடிய
சிறப்பு பதிவு.

மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது என்பதை நன்கு தெரிந்து
கொண்டு அனைத்து துறைகளிலும் தங்கள் அறிவை மேலும் மேலும்
வளர்த்துக்கொண்டு இன்றைய உலகில் வலம் வரும் அனைவருக்கும்
தங்கள் அறிவை மேம்படுத்தி இருந்தாலும் அதை நம் குறிப்பில் சரியான
இடத்தில் எங்கு சேர்ப்பது மேலாளர்கள் கவரும் வகையில் அதை எப்படி
உருவாக்குவது என்று தெரியாமல் இருக்கும் நமக்கு உதவுவதற்க்காக
ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://praux.com

நாம் என்ன படித்திருகிறோம் என்பதில் இருந்து எனக்கு என்ன வேலை
கொடுத்தால் சரியாக இருக்கும் என்ற அனைத்து தகவல்களையும்
எப்படி உருவாக்கலாம் என்று கையைப்பிடித்துச் சொல்லிக்கொடுக்கிறது.
நம் விருப்பப்படி நிறைய மாடல்களில் இருந்து எதைப்போல்
இருக்க வேண்டும் என்றும் எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.அப்படி நாம்
உருவாக்கியதை இமெயில் மூலம் அனுப்பலாம். பிரிண்ட் செய்து
வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது
.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails