காணாமல் போன ஆப்பிள் ஐபோன்,ஐபாட்-ஐ இனி எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஆப்பிள் ஐபோன் நம் கையில் இருந்து எங்கோ வைத்துவிட்டோம் என்று
தேடும் அனைவருக்கும் உதவும் வகையில் ஆப்பிள் ஐபோனை
கண்டுபிடிக்க புதிய மென்பொருள் ஒன்றை ஆப்பிள் நிறுவனம்
அறிமுகம் செய்துள்ளது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை கூட எங்காவது வைத்து விட்டு
நமக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் ஐபோன்,
ஐபேட், ஐபாட் டச் (iPod touch) போன்றவைகள் எங்கு காணமல்
போனாலும் உடனடியாக ஆப்பிள் இணையதள உதவியுடன் இருக்கும்
இடத்தை எளிதாக கண்டுபிடிக்காலாம். இதற்க்காக ஆப்பிள் நிறுவனம்
புதிய மென்பொருள்ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஐபோன் ஃபைண்டர் Mobile me என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த
மென்பொருளை நம் ஆப்பிள் ஐடிவைஸ்களில் நிறுவினால் போதும்
இதில் இருக்கும் Physical Location Finder உதவியுடன் நம் ஐபோன்
ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தாலும் அது இருக்கும் இடத்தை எளிதாக
கண்டுபிடிக்கலாம். இதற்காக ஆப்பிள் நிறுவனம் வருடத்திற்க்கு $99
டாலர் கட்டணம் வசூலிக்கிறது. நம் ஐபோன் மூலம் நாம் ஆப்பிள்
நிறுவனத்தின் இணையதளத்திற்க்கு சென்று புதிய பயனாளர் கணக்கை
உருவாக்கி கொள்ள வேண்டும். நம் ஐபோன் காணமல் போனலாம்
நாம் ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளமான
http://www.apple.com/mobileme என்ற தளத்திற்க்கு சென்று நம்
பயனாளர் கணக்கை திறந்து கொண்டு நம் ஐபோன் எங்கிருக்கிறது
என்று தேடலாம்.

மேப் வசதியுடன் நம் ஐபோன் இருக்கும் இடம் தெளிவாக காட்டப்படும்
உடனடியாக நாம் சென்று எடுத்துக்கொள்ளலாம்
.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails