PDFபைலை EXE பைலாக மாற்ற

சில சமயங்களில் நமக்கு பிடிஎப் பைலாக சில டாக்குமெண்டுகள் கிடைக்கும். ஆனால் அதற்கு பிடிஎப் ரீடர் இருந்தால்தான் படிக்கமுடியும். இந்த சாப்ட்வேரில் பிடிஎப் பைலை இஎக்இ பைலாக மாற்றிவிடுவதால் நாம் சுலபமாக பிடிஎப் பைலை படிக்கலாம். 2 எம்.பி.கொள்ளளவு உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் கிளிக் செய்து உங்கள் பிடிஎப் பைல் எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு வலதுபக்கம் பிடிஎப் பைல் ஓப்பன் ஆவதை காணலாம்.இதில் டூல்பாரில் நான்காவதாக உள்ள டூலின் மூலம் டாக்குமென்டின் பிராபர்டிஸ் (Document Properties)நாம் சுலபமாக பார்த்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதற்கு அடுத்துள்ள சிறிய முக்கோணத்தை கிளிக்செய்து முதல்பக்கத்தையும்-கடைசி பக்கத்தையும் பார்த்துக்கொள்ளலாம். ஏரோ மார்க கிளிக் செய்வது மூலம் ஒவ்வொரு பக்கமாக பார்க்கலாம்.அடுத்துள்ள டூல் மூலம் தேவைப்பட்டால் டாக்குமென்டை கிளாக்வைஸ் -அன்டிகிளாக்வைஸ் மூலம் திருப்பிபார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள( +) குறியை அழுத்துவதன் மூலம் டாக்குமெண்டை பெரியதாகவும் (- ) குறியை அழுத்துவதன் மூலம் சிறியதாகவும் மாற்றிக்கொளளலாம்.அதற்கு அடுத்து மூன்று நிற பட்டன்கள் இருக்கும். Actual Size.Fit Page Fit Width என இருக்கும். அதில் எது தேவையே அதை கிளிக்செய்தால் டாக்குமெண்ட் அதற்கேற்றவாறு மாறுவதை காணலாம்.இதில் ஸ்லைட் ஷோவையும் வரவழைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails