பிளிக்கரில் உள்ள புகைப்படங்களை பேஸ்புக்-ல் இணைக்கலாம்


பிளிக்கரில் நாம் வைத்திருக்கும் படங்களை இனி பேஸ்புக்-ல்
உள்ள நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எப்படி என்பதை
பற்றி தான் இந்த பதிவு.

பிளிக்கரில் இருந்து ஒவ்வொரு புகைப்படமாக தரவிரக்கி
அதை பேஸ்புக்-ல் சென்று தரவேற்றம் செய்திருப்போம் இனி
நேரடியாக நம் பிளிக்கர் கணக்கில் உள்ள புகைப்படங்களை
எளிதாக சில நிமிடங்களில் பேஸ்புக்கில் இணைக்கலாம்.
பேஸ்புக்கும் யாகூவும் இணைந்த செய்தி நாம் அறிந்த ஒன்று
தான் ஆனால் இப்போது தேடுபொறியையும் தாண்டி யாகூ
கொடுக்கும் சேவைகளில் ஒன்றான பிளிக்கரில் இருந்து
பேஸ்புக் – புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற
செய்தியை தற்போது அறிவித்துள்ளது.

http://www.flickr.com/account?tab=extend

படம் 1

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளிக்கரின் முகவரியை
சொடுக்கி படம் 1-ல் காட்டியபடி Connect என்ற பொத்தானை
அழுத்தி பிளிக்கரில் இருந்து பேஸ்புக் உடன் இணையலாம்
.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails