போட்டோஷாப் -எழுத்தில் படம் தெரிய .

புகைப்படத்தினுள் நமது பெயரோ - எழுத்துக்களோ அதனுள்ளே அமைந்திருந்தால் பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். 

அந்த வசதியை போட்டோஷாப்பினுள் எவ்வாறு கொண்டுவருவது என்று இன்று பார்க்கலாம்.தேவையான புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள். நான் கலங்கரை விளக்கம் படத்தினை திறந்துகொண்டுள்ளேன்.

அதில் வேண்டிய பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள்
இப்போது லேயர் -லேயர் ஸ்டைல் கிளிக் செய்யவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வேண்டிய ஸ்டைலை தேர்வு செய்து ஓ.கே. தாருங்கள்.நான் Bevel and Emboss தேர்வு செய்துள்ளேன். கீ்ழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
இப்போது மீண்டும் லேயர் ஸ்டைலை தேர்வு செய்து இப்போதுAdvanced Blending கீழ் உள்ள fill opacity -யின் மதிப்பை 0% என மாற்றிக்கொண்டு ஓ, கே. தாருங்கள்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தெரிய வரும்
என்னங்க...சுலபமாக இருக்கா...


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails