SurroundVision - புதிய தொழில்நுட்பம்

இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் நான்கு கால் பாய்ச்சலில் சென்றுக் கொண்டிருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கூட வாரத்தில் ஒரு நாள் ஒளிபரப்பாகும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியை காணவே வீட்டு வாசலில் கூட்டம் கூடியது. ஞாயிற்று கிழமைகளில் மொழி புரியாமல் கூட சில தொடர்களை மக்கள் ஆவலாக கண்டு ரசித்தார்கள்.
ஆனால் தற்போது தொழில்நுட்ப எல்லை விரிவாக்கமும், அதன் வேகமும் பிரம்மிக்க வைக்கின்றது. SurroundVision - என்றொரு இன்வேன்சனை நிகழ்த்தியிருக்கின்றார்கள். இதன் மூலம் தொழைக்காட்சி திரையில் நாம் பார்க்கும் காட்சிகளின் எல்லையை தாண்டி (பக்கவாட்டு திசைகளில்) நிகழ்பவற்றைக் கூட நம் விருப்பத்தின் பேரில் காண இயலும் என சாதித்து இருக்கின்றார்கள். motion sensor gameகள்
தற்போது மொபைல்களில் பிரபலமடைந்து வருகிறது. அதாவது மொபைல் போன்களை அசைப்பதன் மூலமே விளையாட்டிற்கான கட்டளைகைக் கொடுக்க முடியும். அக்சய் குமார் நடித்த மைக்ரோ மக்ஸ் விளம்பரம் நினைவிருக்கிறதா?

அதுபோல நாம் திரையில் பார்பவற்றிலிருந்து எந்த எந்த திசையில் உள்ள காட்சியை பார்க்க வேண்டும் என்பதை அசைவுகளின் மூலமே கட்டளையிடலாம். திரையில் கிரிக்கெட் பேட்ஸ்மேனை காட்டிக் கொண்டிருந்தால் அருகில் உள்ள பீல்டரை பார்க்க சிறிதே அத்திசையை நோக்கி அசைத்தால் போதும். இதற்க்கு ஒலிபரப்பு முறைகளிலும் சிறிது மாற்றங்களை கொண்டுவர வேண்டுமாம். விரைவில் இதை ஸ்மார்ட் போன்களிலும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். வியப்பாகத்தான் இருக்கின்றது அருகிலுள்ள வீடியோவைப் பாருங்கள். 

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails