Teracopy = SuperCopier ஒப்பிட முடியுமா?

எமது கணணியில் உள்ள அதிகளவான தரவுகளை அல்லது கோப்புகளை ஒரே நேரத்தில் அதிவிரைவாக இடம் விட்டு இடம் (Copy & Paste) நகர்த்துவதற்கு Teracopy மென்பொருளை பயன்படுத்துகிறோம். அண்மையில் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் போது இதே போன்றதொரு இலவச மென்பொருள் கிடைத்தது. பரீட்சித்தும் பார்த்தேன். 500KB அளவுள்ள அதன் பெயர் Super Copier. இதன் வேகமும் செயல்பாடும்  TeraCopy மென்பொருளை பெருமளவு ஒத்திருந்தது. இதற்கான தரவிறக்க சுட்டி இதோ. தரவிறக்கி நிறுவியவுடன் டாஸ்க்பாரில் தெரியும் இதன் ஐகானில் வலது சொடுக்கு செய்தவுடன் தெரியும் வசனப்பெட்டியில் New thread > Copy என்பதை தெரிவு செய்யவும். செய்தவுடன் கீழே உள்ளவாறு படம் தெரியும். 






இதில் Unfold பொத்தானை அழுத்த மேலே உள்ள படத்துடன் சேர்ந்து தோன்றும் வசனப்பெட்டியில் இடது பக்கத்தில் மேலிருந்து கீழாக ஐந்தாவதாக உள்ள Add files பொத்தானை தெரிவு செய்யவும்.




                                
தெரிவு செய்தவுடன் வரும் வசனப்பெட்டியில் உங்கள் Copy செய்ய வேண்டிய கோப்புகளை தெரிவு செய்தவுடன் இன்னொரு வசனப்பெட்டி தோன்றும் அதில் Choose distination folder என்பதை தெரிவு செய்தால் போதும் கோப்புகள் விரைவாக நீங்கள் குறித்த இடத்தில் Paste செய்யப்பட்டு விடும். இதை பதிவாக இடும்போது இதில் அதிகமான நேரம் எடுப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவ்வாறில்லை. மிக குறைவான நேரத்தில் விரைவாக அதிக தகவல்களை டெஸ்க்டாப்பில் வைத்து Copy & Paste செய்ய முடிகிறது. இதில் உள்ள இன்னொரு வசதி என்னவெனில் கோப்புகளை Copy & Paste செய்யும் வேகத்தையும் நாமே செட் செய்து கொள்ள முடியும்.


Teracopy யை விட இது சிறந்ததா என என்னால் கணிக்க முடியவில்லை. ஆனாலும் எனக்கு இது பிடித்துள்ளது. உங்களுக்கும் இது பிடித்திருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails